ஆகஸ்ட் 15முதல் புதிய ரயில் அட்டவனை – முழு விபரம்..

இந்திய ரயில்வேயின் புதிய கால அட்டவனை  ஆகஸ்ட் 15-ல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த  புதிய ரயில்வே கால அட்டவனை நாளை (14/08/2018) இணையத்தளத்தில் வெளியிடப்பட உள்ளது. முழுமையான அட்டவனை நகலை பார்வையிட கீழே க்ளிக் செய்யும். Southern Railway Time Table 2018_Sale Copy_Low Resolution

மதுரையில் ஹஜ் பிறை காணப்பட்டதாக அல்அமீன் பள்ளி இமாம் அறிவிப்பு..

இன்று (12/08/2018) மதுரையில் ஹஜ் மாதத்தின் பிறை காணப்பட்டதாக மதுரை ஜமாத் அலி மற்றும் அல் அமீன் பள்ளி இமாம்கள் தெரிவித்துள்ளனர். இதை பிறை கண்டதற்கான புகைப்படத்துடன் உறுதிப்படுத்தியுள்ளனர். இதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட்  21ம் தேதியும், ஹஜ் பெருநாள் 22ம் தேதியும் கொண்டாடப்படும் என அறியப்படுகிறது. இந்த அறிவிப்பை  ஷரீஅத் அடிப்படையில்  ஊர்ஜிதம் செய்வதாக மதுரை அரசு காஜி  சையித் காஜா முயீனுத்தீன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தண்டவாளப் புதுப்பிப்புப் பணிகள் தொடக்கம் – அடுத்த 25 நாட்களுக்கு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் : ரயில்வே நிர்வாகம்..

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தண்டவாள புதுப்பிப்புப் பணிகள் நடைபெறுவதால், அவ்வழித்தடத்தில் 25 நாட்களுக்கு ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். கேத்தாண்டப்பட்டி முதல் வாணியம்பாடி வரையிலான தண்டவாள புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. மதியம் 12 மணிக்குத் தொடங்கிய பணிகள் மாலை 5 மணி வரையில் நடைபெற்றன. இதன் காரணமாக நாகர்கோவிலில் இருந்து காக்கிநாடா செல்லும் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், தர்பங்காவில் இருந்து மைசூரு செல்லும் பாங்மதி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் […]

ஆடி அமாவாசை முன்னிட்டு இராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்…

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு 10.8.2018 சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. மதுரையில் ஆகஸ்ட் 10 இரவு 10:40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஆகஸ்ட் 11 அதிகாலை 2 மணிக்கு இராமேஸ்வரம் சென்றடையும். சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், பாம்பன் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும். இராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 11 இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் ஆகஸ்ட் […]

இராமநாதபுர மாவட்டம் மின்துறை சார்பான குறைகளை தெரிவிக்க புதிய எண்கள் வெளியீடு..

கடந்த 27/07/2018 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், இராமநாதபுரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள மின்னழுத்த குறைபாடு, மின் தடை தொடர்பான குறைகளை மின் நுகர்வோர் சார்ந்துள்ள பகுதி மின் வாரிய அலுவலர்களை தெரிவிக்கப்பட்டுள்ள அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என இராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மா.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கீழே அனைத்து எண்கள் விபரங்கள் தரப்பட்டுள்ளது. உதாரணமாக கீழக்கரை 04567-294145 மற்றும் 944585 3018.

விபத்தில் மறைந்த தொலைகாட்சி நிருபர் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு

சமீபத்தில் திண்டுக்கல் மதுரை செல்லும் வழியில்  பொட்டிகுளம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில்  மறைந்த மாலைமுரசு தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சதீஷ் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் அறிவிப்பு செய்துள்ளார்.

பள்ளிகளுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு தேதிகள் மற்றும் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது..

சென்னை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு கால விடுமுறை மற்றும் பள்ளி திறக்கும் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவி ஏற்ற பின், தேர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. பிளஸ் 1க்கு, பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடக்கும் தேதிகள், பள்ளி துவங்கிய நாளே அறிவிக்கப்பட்டன. தேர்வு […]

கோவையில் இனி பொதுக்குழாய் இல்லை ..மின்சாரம், பெட்ரோல், டீசலைப் போல் குடிநீருக்கு மீட்டர் கட்டணம்…

கோவையில் பொதுக்குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டு மின்சாரம், பெட்ரோல், டீசலைப் போல் மீட்டர் அளவீட்டில் தேவைக்கேற்ப கட்டணம் செலுத்தி குடிநீரை பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாக ஆணை யர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார்கள். கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை அடுத்த 26 ஆண்டு காலத்திற்கு பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்க கோவைமாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த மிட்டுள்ளது. இந்நிலையில் சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்த […]

முத்திரை தாள் விற்பனையாளராக விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாள்..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 43 இடங்களுக்கு முத்திரைத்தாள் விற்பனையாளர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இராமநாதபுரம் இணை சார் பதிவகம் எண் 2, போகலூர் தலா 1, கீழக்கரை 6, ராமேஸ்வரம் 5, கமுதி 4, முதுகுளத்து£ர் 4, அபிராமம் , சாயல்குடி, கடலாடி , ஆர்.எஸ்.மங்கலம் தலா 3 என மொத்தம் 43 இடங்களில் முத்திரைத்தாள் விற்பனையாளர் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  முத்திரை சட்ட விதி 25(1)(சி) படி முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களுக்கான தகுதிகள்  கீழ்கண்டவாறு:- -எழுத, படிக்க தெரிந்திருக்க […]

அறிவோம் – உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) அலைபேசி எண்…!!!

அறிவோம் – உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) அலைபேசி எண்…!!!* அப்படியே தாலூகாவையும் அறிந்து கொள்ளலாமே….. *1 .சென்னை மாவட்டம்* ——————————— 1 Fort-Tondiarpet 94450 00484 2 Purasawakkam-Perambur 94450 00485 3 Egmore-Nungambakkam94450 00486 4 Mylapore-Triplicane 94450 00487 5 Mambalam-Guindy 94450 00488 *2 .திருவள்ளூர் மாவட்டம்* ————————————- 6 Ambattur 94450 00489 7 Ponneri 94450 00490 8 Gummudipoondi 94450 00491 9 Thiruthani 94450 00492 […]

சொத்து வரி, குடிநீர் வரி உயர்வு ஆணை வெளியீடு ..

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி உட்பட்ட  அனைத்து பகுதிகளுக்கும் சொத்து வரி மற்றும் குடிநீர் உயர்வுக்காண ஆணையை 20/07/2018 அன்று தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.  வரி உயர்வு 50 முதல் 100 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அரசானை நகல் கீழே..

சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் கடன் வழங்கும் லோன் மேளா நாளை (26/07/2018) நடைபெற உள்ளது..

இராமநாதபுரத்தில் சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு டாம்கோ (TAMCO) மூலம் தொழில் கடன் வழங்கும் லோன் மேளா சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) மற்றும் மேலாண்மை இயக்குநர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோரால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 26.07.2018 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் […]

ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய்: பழைய நோட்டுகள் செல்லுமா?

மோடி தலைமயிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அதன் பின்னர் புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியாகின. அதன் பின்னர், ரூ.10, ரூ.50, ரூ.200 ஆகிய புது நோட்டுகளையும் ஆர்பிஐ புழக்கத்தில் விட்டது. இந்நிலையில் இன்று புதிய ரூ100 நோட்டுக்கான மாதிரியை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. புது 100 ரூபாய் லாவண்டர் நிறத்தில் காந்தியின் […]

கமுதியில் ஜூலை 21ல் மின் தடை அறிவிப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி உப மின் நிலையத்தில் (21.7.18) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9:00மணி முதல் மாலை 5:00 மணி வரை கமுதி, அபிராமம், பார்த்திபனூர், முதுகுளத்தூர், செங்க படை, கீழராமநதி, மண்டல மாணிக்கம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளர் என்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழிற்திறன் பயிற்சி பெற கௌசல் பாஞ்சி (Kaushal Panjee ) செயலியில் பதிவு செய்திடலாம்..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.07.2018) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.நடராஜன்  தலைமையில் ‘வளர்ந்து வரும் மாவட்டங்கள்” (Aspirational District) திட்டப் பணிகளின் கீழ் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும்  ‘கௌசல் பாஞ்சி” என்ற செயலி குறித்து மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: மத்திய அரசு இந்திய அளவில் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்துள்ள மாவட்டங்களில் இராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும்.  […]

மண்டபம் உப மின் நிலையத்தில் ஜூலை 17 (செவ்வாய் கிழமை) மின் விநியோகம் நிறுத்தம் ..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உப நிலையத்தில் ஜூலை 17 – (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9:45 மணி முதல் மாலை 4:45 வரை மின் விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் மின் தடை படும் பகுதிகள் இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, இடையர்வலசை, குஞ்சார்வலசை, நடுமனைக்காடு, உடையார்வலசை, சுந்தரமுடையான், பால்குளம், அரியமான், சாத்தக்கோன்வலசை

ராமநாதபுரத்தில் ஜூலை 19ல் தடகள விளையாட்டு போட்டி ..

தமிழ்நாடு அரசு பொன் விழா ஆண்டை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜூலை 19ல் தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஜூலை 19 காலை 8 மணிக்கு 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க 2017 டிச., 31 அன்று 21 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் சொந்த மாவட்டத்திற்காகவோ, […]

ஜூலை 14ல் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ..

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஜூலை மாதத்திற்கான பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 14, சனிக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் வட்டம் காரேந்தல், இராமேஸ்வரம் வட்டம்  அக்காள்மடம் கிராம நிர்வாக அலுவலர் சாவடி, திருவாடானை வட்டம்  மச்சூர், பரமக்குடி வட்டம்  உரப்புளி, […]

TATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் – அறிவிப்பு வெளியீடு ..

தமிழக அரசு இந்த ஆண்டும் தட்கல் (Tatkal) முறையில் விவசாய மின் இணைப்பு பெற இந்த ஆண்டும் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 5 குதிரைத்திறன் மோட்டார் – 2.5 இலட்சம் 7.5 குதிரைத்திறன் மோட்டார் – 2.75 இலட்சம் 10 குதிரைத்திறன் மோட்டார் – 3 இலட்சம் 15 குதிரைத்திறன் மோட்டார் – 4 இலட்சம் மற்றும் நில உடைமை ஆவணங்களுடன் 31.07.2018 நாளிற்குள் அந்தந்த பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளுங்கள். விரைவில் இலவச விவசாய மின் […]

சட்டபேரவை குழுக்கள் நியமனம்: பேரவை தலைவர் தனபால் அறிவிப்பு..

தமிழக சட்ட பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை தலைவர் தனபால் அறிவித்த பல்வேறு குழுக்களுக்கான  உறுப்பினர்கள் பட்டியல்.  பேரவையின் மதிப்பீட்டு குழுவிற்கு தோப்பு வெங்கடாசலம் தலைமையில் பொன்முடி( திமுக) உள்ளிட்ட 16 உறுப்பினர்களை அறிவித்தார். பொதுக்கணக்கு குழு தலைவராக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் தலைமையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, அபுபக்கர் உள்ளிட்ட உறுப்பினர்களை அறிவித்தார். பொது நிறுவனங்கள் குழு தலைவராக செம்மலை தலைமையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, பிச்சாண்டி, கோவி செழியன், […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!