தெற்கு வங்க கடலில் 6ம் தேதி குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாக வாய்ப்புள்ள காரணத்தால் 50-60 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீச வாய்ப்புள்ளது. ஆகையால் இராமநாதபுர மாவட்ட மீனவர்கள் வரும் 6,7,8ம் தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளார்கள். இந்த அறிவிப்பை இராமநாதபுரம் மீன் வளம் உதவி இயக்குனர் மற்றும் சாயல்குடி மீன் வளம் ஆய்வாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
Category: அரசு அறிவிப்பு
இராமநாதபுரத்தில் நாளை (25/10/2018 – வியாழன்) மின் தடை..
இராமநாதபுரம், தேவிபட்டினம், காவனூர், ரெகுநாதபுரம், தேவிபட்டினம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (25.10.2018) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (25.10.2018) காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை ராமநாதபுரம் நகராட்சி, சக்கரக்கோட்டை, பாரதி நகர், மாவட்ட ஆட்சியரக பகுதி, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி பகுதி , திருப்புல்லாணி, எம்.எஸ்.கே.நகர், பசும்பொன் நகர், கூரியூர் , காஞ்சிரங்குடி, புத்தேந்தல் , ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, வண்ணாங்குண்டு, […]
கீழக்கரையில் நாளை (20/10/2018 – சனிக்கிழமை) மின்சார தடை..
கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் 20/10/2018 – சனிக்கிழமை அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் நிலைய பொறியாளர் கங்காதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாற்றுதிறனாளிகள் பேருந்தில் பயணிக்க புதிய உத்தரவு ..
மாற்றுத்திறனாளிகள் பேருந்து பயணம் மேற்கொள்ளும்போது ஏற்ப்படும் பல்வேறு சிரமங்களை தீர்க்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் நடத்தியதன் விளைவாக மாநில போக்குவரத்து ஆணையர் அவர்கள் கடந்த 14.09.18 அன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்கள். அதன்படி மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறுவதற்கு இறங்குவதற்கும் வசதியாக அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் அனைத்திலும் சாய்வுதளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்ப்படுத்தி தர வேண்டும், மாற்றி வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் பயணம் […]
கீழக்கரை நகராட்சியில் மண்டலம் வாரியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டு இருக்கும் சொத்து வரி குறித்து உங்களுக்கு தெரியுமா.?
கீழக்கரை நகராட்சி சார்பாக கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள நாளிதழ் விளம்பரப்படி, கீழக்கரை நகரின் சொத்து வரி தொகை, 200 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது அரசாணை அனுமதித்துள்ள அளவை விட மிக அதிகமாகும். நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நகரின் அனைத்து பகுதிகளும், மூன்று மண்டலங்களாக : மண்டலம் A, மண்டலம் B, மண்டலம் C என பிரிக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமான மேல் விபரங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள PDF ஆவணத்தை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.👇 சொத்து […]
இராமநாதபுரத்தில் சனிக்கிழமை (29/09/2018) மின் தடை..
இராமநாதபுரம், ஆர்.எஸ்.மடை, ரெகுநாதபுரம், தேவிபட்டினம் உப மின் நிலையங்களில் 29.9.2018(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9:45 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையம்: ராமநாதபுரம் நகராட்சி பகுதிகள், அரண்மனை, பழைய, புதிய பேருந்து நிலையங்கள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதி நகர், மாவட்ட ஆட்சியர் வளாகம், பட்டணம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லு£ரி பகுதிகள். ராமநாதபுரம் துணை மின் […]
கீழக்கரையில் 20/09/2018 – வியாழன் அன்று மின் தடை..
கீழக்கரை 110KV உப மின் நிலையத்தில் 20/09/2018 அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால் கீழக்கரை, காஞ்சிரங்குடி மற்றும் அம்மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் நிலைய பொறியாளர் கங்காதரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 9ந்-தேதி முதல் 2 மாதம் 144 தடை உத்தரவு கலெக்டர் வீர ராகவ ராவ் தகவல்…
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் செப் 9 முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் பிறப்பித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப். 11-ந்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் மாதம் 28,29,30 தேதிகளில் பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த விழாக்களில் வாகனங்களில் வந்தவர்களால் ஏற்பட்ட சில அசம்பாவித சம்பவங்கள், […]
கீழக்கரை நகராட்சி மேலாளரே இனி ஆணையாளர்..
கீழக்கரை நகராட்சி பொறுப்பு ஆணையாளராக இருந்து வந்த பரமக்குடி ஆணையாளர் நாராயணன் கடந்த வாரம் பழனி நகராட்சிக்கு மாற்றமாகியதை தொடர்ந்து, கீழக்கரை நகராட்சி மேலாளராக பணியாற்றி வந்த A.தனலெட்சுமி கூடுதலாக கீழக்கரை ஆணையாளர் பொறுப்புகளையும் சேர்த்து கையாளுவதற்கான அரசாணை அளிக்கப்பட்டுள்ளது. இனி மேலாவது கீழக்கரை நகராட்சி பணிகள் தொய்வில்லாமல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர். தகவல்: மக்கள் டீம்
சிறுபான்மையின மாணவர்களுக்கு பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப் திட்டம்….
சிறுபான்மையினராக கருதப்படும் முஸ்லீம், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சி சமூகத்தைச் சார்ந்த கல்வியில் சிறந்து விளங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி தொடர்ந்து பயில முடியாத மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘‘பேகம் ஹஸரத் மாஹல் நேஷனல் ஸ்காலர்ஷிப் ” (முன்பு மௌலானா ஆசாத் கல்வி ஸ்காலர்ஷிப்) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பெற்றோரின் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்; 9–ம் வகுப்பு முதல் 11–ம் […]
இராமநாதபுர மாவட்டத்தில் 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது..
2018ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. இதில் இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த 11 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. அவர்களுடைய விபரம் கீழே:- செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் குருபூஜை முன்னேற்பாடுகள்…
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11.09.2018 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவராவ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் சமுதாய தலைவர்களுடன் நடத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடாபான ஆலோசனை கூட்டத்தில் எடுத்த முடிவுகள். 1. அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து வருவோர் சொந்த வாகனங்களில் வர அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களில் வர […]
கீழக்கரையில் நாளை (29/08/2018 – புதன்கிழமை) மின் தடை..
கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான அலவாகரைவாடி, மாயாகுளம், பாலிடெக்னிக்கில் பகுதி, ஏர்வாடி, தேரிருவேலி, உத்திரகோசமங்கை, பாலையரேந்தல், காஞ்சிரங்குடி மற்றும் மோர்குளம் பகுதியில் 110kv உப மின் நிலையத்தில் உள்ள பராமரிப்பு காரணமாக 29/08/2018, புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என உதவி பொறியாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கீழக்கரையில் வரும் 21ம் தேதி மின் தடையை மாற்றியமைக்க கோரிக்கை..
கீழக்கரையில் 21ம் தேதி மின் தடை இருப்பதாக மின்சார துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அடுத்த நான் பெருநாளாக இருப்பதால் கீழக்கரை கடற்கரை பள்ளி ஜமாத், கிழக்கு தெரு ஜமாத் மற்றும் மேல தெரு ஜமாத் சார்பாக மின் தடையை பெருநாள் கழிந்த பின்பு மாற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
கீழக்கரை கட்டிட விதிக்கான கருத்தை தெரிவிக்க கடைசி தேதி.20/08/2018.. தாமதம் வேண்டாம்…மாதிரி படிவம் இணைக்கப்பட்டுள்ளது..
தமிழக அரசால் , தமிழ் நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகள் மற்றும் கட்டிட விதிகள் என்கிற வரைவு விதிகள் 2018 கடந்த மொதம் வெளியிடப்பட்டு அரசு இணைய தளங்களில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இந்த கட்டிட விதிகளின் பிரகாரம் தான் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை கட்ட வேண்டும். அதே வேளையில் இந்த வரைவு விதிகள் சம்பந்தமாக ஏதேனும் கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் 20.08.2018 தேதிக்கு முன்னதாக மின்னஞ்சல் மூலமாக நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு […]
கமுதியில் நாளை (18/08/2018 – சனிக்கிழமை) மின் தடை
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி உப மின் நிலையத்தில் நாளை (18.8. 2018) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. இதனால் கமுதி, அபிராமம், பார்த்திபனூர், முதுகுளத்தூர், செங்க படை, கீழராமநதி, மண்டல மாணிக்கம் மற்றும் இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 18. 8.18 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கமுதி மின் விநியோக உதவி செயற்பொறியாளர் என். சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு..
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண் 23/2017 ன் படி தொகுதி 4 ல் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வினை 11.02.2018 அன்று நடத்தி அதற்கான தேர்வு முடிவுகளை (தரவரிசைப் பட்டியல்) 30.07.2018 அன்று வெளியிட்டது. அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிபணியிடங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு இந்த தேர்வுக்கென சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படவேண்டிய தேதி 16.08.2018 முதல் 30.08.2018 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கூடுதல் காலிப்பணியிடங்கள் பெறப்பட்டதன் காரணமாக இன சுழற்சி அடிப்படையில் எந்தெந்த […]
இராமேஸ்வம், மண்டபம் பகுதிகளில் 17/8/18 மின் தடை…
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உப மின் நிலையத்தில் 17/8/2018 (வெள்ளி கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4. 45 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என இராமநாதபுரம் ஊரக உப கோட்ட உதவி செயற்பொறியாளர் எம். சந்திரசூடன் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரம் மின் விநியோக பிரிவு கட்டுப்பாட்டில் இராமேஸ்வரம் உப மின் நிலையம், இராமேஸ்வரம் நகர், வேர்க்கோடு, இராமேஸ்வரம் ரோடு, […]
தமிழ்நாடு ஆன்லைன் மின்இணைப்பு-இனி புதிய இணைப்பு ஆன்லைன் மூலம் பெறலாம்..
புதிதாக மின்இணைப்பு தேவைப்படும் பொதுமக்கள் எளிமையான முறையில் மின்இணைப்பு பெறவும் , காலதாமதம் மற்றும் லஞ்சத்தை தவிர்க்கும் பொருட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணையதளம் வாயிலாக மின்இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. www.tangedco.gov.in என்ற மின்வாரிய இணையதள முகவரி மூலம் நேரடியாக விண்ணபித்து மின்வாரிய சேவையை பெறலாம். புதிய மின்இணைப்பு கட்டணம் விபரம்:- Single Phase வீடு – ₹ 1600 கடை – ₹ 1600 தொழிற்சாலை – ₹ 1620 தற்காலிக இணைப்பு […]
எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?. அதில் என்ன முடிவெடுக்கலாம்.?…
எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ? 1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்) 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி) 2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா? ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும். 3. கிராம சபை கூட்டம் […]
You must be logged in to post a comment.