திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: வண்டி எண்:- 56822 திருநெல்வேலி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் திருச்சிராப்பள்ளி – தஞ்சாவூர் இடையே 31.12.2018 வரை பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. (ஞாயிற்றுக்கிழமை தவிர). வண்டி எண்:- 56821 மயிலாடுதுறை – திருநெல்வேலி பயணிகள் ரயில் தஞ்சாவூர் – திருச்சிராப்பள்ளி இடையே 31.12.2018 வரை பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. (ஞாயிற்றுக்கிழமை தவிர). செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
Category: அரசு அறிவிப்பு
மதுரையில் காவல்துறை சார்பாக 13/12/2018 அன்று மனுதாரர்கள் குறை தீர்க்கும் நாள்..
பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் (குடும்ப பிரச்சனைகள், வரதட்சணை கொடுமைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பாலியல் துன்புறுத்தல், பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் கொடுமைகள் தொடர்பான மனுக்களை ஏற்கனவே காவல் ஆணையர் அவர்களிடம் நேரடியாக கொடுத்த மனுதாரர்கள், காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்களிடம் நேரடியாக மனு கொடுத்த மனுதாரர்கள் காவல் உதவி ஆணையர் (வரதட்சணை ஒழிப்பு பிரிவு) அவர்களிடம் நேரடியாக கொடுத்த மனுதாரர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களான தல்லாகுளம், திருப்பரங்குன்றம், தெற்கு, […]
கீழக்கரையில் தொலை தொடர்பு சம்பந்தமான நிறை குறைகளை தெரிவிக்க ஒரு வாய்ப்பு ..
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் TRAI – Telecom Regulatroy Authority of India எனும் தொலை தொடர்பு ஆணையம் கீழக்கரைக்கு வருகின்ற 10.12.18 திங்கள் கிழமை வருகை தர உள்ளனர். அன்று மாலை 3.00 மணியில் இருந்து கீழக்கரை ஹீசைனியா மஹாலில் நடக்கவிருக்கும் நிகழ்வில் தொலை தொடர்பு சாதனங்களில் உள்ள சாதகங்கள் மற்றும் பாதகங்களை பற்றி எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ குறைகளை கூறலாம். இந்நிகழ்வில் AIRTEL, JIO, VODAFONE, IDEA, BSNL மற்றும் இன்ன பிற அதிகாரிகளும் […]
மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் பாலத்தில் ரயில் சேவை ரத்து ..
பாம்பன் ரயில் பாலத்தின் ஒரு பகுதியில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பராமரிப்பு பணிகள் நேற்று (04.12.2018) முதல் துவங்கியுள்ளது. இந்த பணிகள் கூடுதல் பாதுகாப்புக்காக செய்யப்படுகிறது. இதன் காரணமாக பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் ரயில்கள் போக்குவரத்து மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. இராமேஸ்வரம் பகுதியில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும். பயணிகளை மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து இராமேஸ்வரத்திற்கு மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கு […]
இராமேஸ்வரம் – மண்டபம் இடையே 2வது நாளாக ரயில்கள் ரத்து…
இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 05.00 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (05.12.2018) ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. இராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 08.15 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (05.12.2018) ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதி வாரியாக ரத்து செய்யப்படுகிறது. இன்று (05.12.2018) இரவு 07.00 மணிக்கு […]
இன்று (04/12/2018) இராமேஸ்வரம் – சென்னை விரைவு ரயில் அனைத்தும் ரத்து…அஜமீர் ரயில் நேரம் மாற்றம்…
மதுரை கோட்டத்தில் அவசர பராமரிப்பு பணி நடைபெறுகின்ற காரணத்தினால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று மாலை 05.30 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (04.12.2018) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 08.15 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் இன்று (04.12.2018) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ரயில் நேரம் மாற்றியமைப்பு:- […]
மதுரை கோட்ட பராமரிப்பு பணி – டிசம்பர் 1 முதல் 31 வரை சேவை மாற்றம் ..
மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி நடைபெறும் காரணத்தால் ரயில் இயக்கங்களில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1. வண்டி எண் 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 01.12.2018 முதல் 31.12.2018 வரை 90 நிமிடங்கள் தாமதமாக பாலக்காடு கோட்டம் சென்றடையும் (வியாழக்கிழமை தவிர). 2. வண்டி எண் 56320 கோயம்புத்தூர் – நாகர்கோவில் பயணிகள் ரயில் 01.12.2018 முதல் 31.12.2018 வரை 45 நிமிடங்கள் தாமதமாக திருவனந்தபுரம் கோட்டம் சென்றடையும் (வியாழக்கிழமை தவிர). 3. வண்டி […]
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ECNR பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (ECNR) பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பையும், நலனையும் உறுதி படுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. ஆனால் பல்வேறு நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் குழப்பம் அடைதுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இந்த விதிமுறை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மதுரை ரயில்வே ஜங்ஷன் பிளாட்பாரம் 1 இல் தரை தளப் பணி நவ.24- டிச.13 வரை ரயில் சேவை மாற்றம்…
மதுரை ரயில் நிலைய நடைமேடை ஒன்றில் இருப்பு பாதை தரை தளம் மேம்படுத்தும் பணிகள் 24.11. 2018 முதல் 13.12. 2018 வரை 20 நாட்கள் நடைபெற உள்ளதால் ரயில் சேவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1. வண்டி எண் 56709 பழனி – மதுரை பயணிகள் ரயில் 24.11.2018 முதல் 12.12.2018 வரை கூடல் நகர் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 2. வண்டி எண் 56710 மதுரை – பழனி பயணிகள் […]
திருவண்ணாமலை உள்ளூர் விடுமுறை..
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மகாரதத்தை முன்னிட்டு 20.11.18 அன்றும், அண்ணாமலையார் தீபத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமையும் (23.11.18) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. செய்தியாளர்:- கே.எம்.வாரியார்,வேலூர்
கன மழை.. இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (20/11/2018) விடுமுறை..
இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (20.11.18) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., உத்தரவு. -செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், இராமநாதபுரம்
கஜா புயல் ஏதிரொலி.நாளை நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…
இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி தங்கவேல் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் 16-11-2018 (வெள்ளிகிழமை) அன்று நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் நிலவும் கஜா புயல் காரணமாக மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி இந்த முகாம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகின்றது. அடுத்த கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இது சம்பந்தமாக கீழை […]
கஜா புயல் எதிரொலி இராமேஸ்வரம் ரயில் சேவைகள் நிறுத்தம்..
கடலோர பகுதிகளில் கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து ராமேஸ்வரம் வந்து செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: வண்டி எண் 56829/56830 திருச்சி ராமேஸ்வரம் -திருச்சி பயணிகள் ரயில் 15.11. 2018 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண் 56723/56724, 56721/56722, 56725/56726 மதுரை -ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 15. 11. 2018 அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 14. 11. 2018 அன்று சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 22661 சென்னை […]
கஜா புயல் பொது மக்கள் அஞ்ச வேண்டாம் – ஆட்சியர் பேட்டி – வீடியோ..
கஜா புயல் மக்கள் அஞ்ச வேண்டாம் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும் கஜா புயல் குறித்து மக்கள் அஞ்ச வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: கஜா புயலை எதிர்கொள்ள மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்த தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எளிதில் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளாக 39 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மீட்பு பணிகளை மேற்கொள்ள 15 மண்டல அளவிலான பாதுகாப்புகள் பல்வேறு துறை அலுவலர்கள் கொண்ட 135 […]
கஜா புயல் நாளை (15/11/2018) மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு உத்தரவு..
கஜா புயல் நாளை (15/11/2018) கடலூர் மற்றும் பாம்பன் வழியாக கரையை கடக்க இருப்பதால் பலத்த காற்று வீசலாம் என எதர்பார்க்கபடுகிறது. இதை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து திருவாரூர், இராமநாதபுரம் மாவட்டங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கமுதி புதிய தாசில்தாராக சிக்கந்தர் பபிதா பொறுப்பேற்பு..
பரமக்குடி நத்தம் நிலவரி சட்ட வட்டாட்சியராக பணியாற்றிய சிக்கந்தர் பபிதா, கமுதி தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டார். கமுதி வட்டாட்சியராக இருந்த க.முருகேசன் இராமநாதபுரம் தேர்தல் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, பரமக்குடி நத்தம் நிலவரி சட்ட தாசில்தாராக பணியாற்றிய சிக்கந்தர் பபிதா, கமுதி தாசில்தாராக பொறுப்பேற்றார். கமுதி பகுதியில் மணல் திருட்டை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
பராமரிப்பு பணிக்காக நவம்பர் 12 முதல் 16 வரை இராமேஸ்வரம் ரயில்கள் ரத்து..
மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் காலை 06:50 மணிக்கு புறப்படும் 56723 பாசஞ்சர் ரயில், பராமரிப்பு காலங்களில் இராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு தினமும் நண்பகல் 11:20 மணிக்கு கிளம்பும். அதே போல் 56722 பாசஞ்சர் ரயில் நவம்பர் 12, 13, 15 மற்றும் 16 தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக இராமநாதபுரம் – இராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்விரு ரயில்களும் (56723/56722) நவம்பர் 14இல் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குரூப்-2 தேர்வு எழுதுபவர்களுக்கு வாழ்த்து… கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள்…
நடைபெற இருக்கும் குரூப் 2 தேர்வினை எழுத செல்லும் தேர்வர்கள் தேர்வு அறையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அவைகள் வருமாறு: 1. தேர்வு எழுதுபவர் அதற்கான ஹால் டிக்கெட்டுடன் வரவேண்டும், இல்லாமல் வந்தால் தேர்வெழுத அனுமதில் இல்லை. 2. தேர்வு எழுதுபவர்கள் ஹால் டிக்கெட்டில் புகைப்படமோ அல்லது கையொப்பமோ சரியாக இல்லை என்றால் அதற்கு பதிலாக வேற ஒரு அத்தாட்சியை அலுவலரின் சான்றிதழ் பெற்று கொண்டு வரவேண்டும். 3. காலை […]
பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..
அந்தமான் கடற்பகுதில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 12.11.2018 க்கு மேல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் 12.11. 18 இரவுக்குள் கரை திரும்ப வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். 14.11. 18 இல் சென்னை உட்பட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். இதன் […]
இராமநாதபுரத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம்..
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் 16.11.2018 (வெள்ளிக்கிழமை)காலை 9.30 மணி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் (அரசு திட்டங்கள் பெற) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்று கீழ்கண்டவற்றில் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்கி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை (PHP), மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை (MG), வங்கிக்கடன் குறைகள், […]
You must be logged in to post a comment.