ஏப்ரல் 5 முதல் 14ம் தேதி வரை அரக்கோணம் வழித்தடத்தில் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

பராமரிப்பு பணி காரணமாக சென்ட்ரல் – அரக்கோணம் – வேலூர் வழித்தடத்தில் வரும் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் – தக்கோலம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதனால் வேலூர் – அரக்கோணம் (56014), அரக்கோணம் – வேலூர் (56013), சென்ட்ரல் – அரக்கோணம் (56001), அரக்கோணம் – சென்ட்ரல் […]

மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல் ஆணையர் அன்பான வேண்டுகோள்…

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் மற்றும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பிற கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் வாங்கிகொடுப்பதாக பணத்தை பெற்றுக்கொண்டு பலர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே அதனை தடுக்கும் பொருட்டு மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலையும், மருத்துவக்கல்லூரி மற்றும் பிற கல்லூரிகளில் படிப்பதற்கான இடமும் தகுதியின் அடிப்படையில் தான் வழங்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும்போது யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் மேலும் பணம் […]

இந்த வருடம் முதல் 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு..கல்வித்துறை அறிவிப்பு..

வரும் கல்வியாண்டு 2018 /2019 ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு மத்திய அரசு அறிவித்துள்ள இந்த கல்வி ஆண்டு முதல் இதை அமல்படுத்துவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது சுமார் 2 மணி நேரம் இந்த பொது தேர்வு நடக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (07/01/2019) புறப்படும் நேரம் மாற்றம் ..

இன்று (07.01.2019) மாலை 04.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண்.16780 ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் இன்று (07.01.2019) இரவு 11.30 மணிக்கு மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். செய்தி:- முருகன். இராமநாதபுரம்

நாளை (04/01/2019) இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்..

இராமநாதபுரத்தில் நாளை (04/01/2019) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள், இடைநிறுத்தம் செய்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள், இடை நிறுத்தம் செய்தவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் வயது 35க்குள் இருக்க வேண்டும். இம்முகாமில் கலந்து கொண்ட பின்பு இரண்டு மாத பயிற்சிக்கு பின்பு வேலை வாய்ப்பு உண்டாகும். இப்பயிற்சிக்கு கட்டணத் தொகை ஏதுமில்லை. பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு […]

நாளை (03/01/2019) முதல் ரத்தாகும் ரயில் விபரங்கள் …

ஜன.3, 4, 5 இல் ரத்தாகும் ரயில்கள் வண்டி எண். 56723/ 56722/ 56725/ 56724/ 56721/ 56726 மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் 03.01.2019, 04.01.2019 மற்றும் 05.01.2019 தேதிகளில் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. வண்டி எண். 56829/56830 திருச்சிராப்பள்ளி – ராமேஸ்வரம் – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் 03.01.2019, 04.01.2019 மற்றும் 05.01.2019 தேதிகளில் ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. வண்டி […]

மதுரை – மண்டபம் இடையே ஜன., 3, 5 இல் சிறப்பு ரயில்கள்..

1. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 03.01.2019 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 03.30 மணிக்கு மண்டபம் சென்றடையும். 2. பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 03.01.2019 மற்றும் 05.01.2019 மாலை 04.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 07.00 மணிக்கு மதுரை சென்றடையும். 3. பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து 03.01.2019 மற்றும் 05.01.2019 இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.30 மணிக்கு மதுரை […]

ஜனவரி 2 முதல் 9ம் தேதி வரை மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீட்டு முகாம்..

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜனவரி 2 முதல் 9ம் தேதி வரை மாற்று திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான அளவீட்டு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் மாற்று திறனாளிகளின் தேவைகளை  அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப அளவீடு செய்து வழங்க ஏற்பாடு செய்யப்படும்.  இதற்கான ஏற்பாட்டை ARTIFICIAL LIMBS MANUFACTURING CORPORATION OF INDIA (ALIMCO) என்ற அரசு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. முகாம்கள் நடைபெறும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு செல்பவர்கள் மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப […]

மின் தூக்கி முறையில் புதிய பாம்பன் பாலம்: வைரலாகும் வீடியோ காட்சி..

இராமேஸ்வரம் செல்லும் முன் மண்டபம் – பாம்பன் இடையேயான பாம்பன் ரயில் பாலம் இந்திய அடையாளங்களில் ஒன்று. சரக்கு கப்பல் வரும்போது பாலம் தூக்கப்படும் காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.. கடந்த 1911ஆம் ஆண்டு தொடங்கி 1915ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் நூற்றாண்டை கடந்துள்ளது. இந்நிலையில் இப்பாலத்தில் நவ.4 ல் பழுது ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நூற்றாண்டை கடந்து விட்ட இப் பாலத்திற்கு மாற்றாக, ரூ.250 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்படும் […]

அறிவோம் சீரமைக்கப்பட்ட பாராளுமன்ற தொகுதிகள் – தமிழக விபரங்கள் பார்வைக்கு..

பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு; சட்டமன்ற தொகுதிகள் வாரியாக இந்தியா முழுவதும் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டன. பாராளுமன்ற தொகுதிகள் வாரியாக சட்டமன்ற தொகுதிகள் ப‌ட்டிய‌ல் இதோ உங்கள் பார்வைக்கு;- 1. திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதி… 1.கும்மிடிப்பூண்டி 2. பொன்னேரி (தனி) 3. திருவள்ளூர் 4. பூந்தமல்லி (தனி) 5. ஆவடி 6. மாதவரம் 2. வட சென்னை பாராளுமன்ற தொகுதி. 1.திருவொற்றியூர் 2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 3. பெரம்பூர்4. கொளத்தூர் 5. திரு.வி.க. நகர் (தனி) […]

மதுரை – மண்டபம் இடையே 02/01/2019 வரை சிறப்பு ரயில்கள்..

மதுரை – மண்டபம் இடையே 26.12.2018 முதல் 02.01.2019 வரை பாசஞ்சர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது, அதன் விபரங்கள்:- 1. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 26.12.2018, 29.12.2018, 31.12.2018 மற்றும் 02.01.2019 காலை 05.00 மணிக்கு புறப்பட்டு அன்று காலை 08.00 மணிக்கு மண்டபம் சென்றடையும். 2. பயணிகள் ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 27.12.2018 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 03.00 மணிக்கு மண்டபம் சென்றடையும். 3. பயணிகள் ரயில் […]

கடலாடி, சாயல்குடி பெருநாழி பகுதியில் டிச.26 இல் மின் தடை…

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி துணை மின்நிலையத்தில் 26.12.2018 இல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கடலாடி , சாயல்குடி , பெருநாழி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அன்றைய தினம் காலை 9:00 முதல் 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்பதை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். செய்தி:- முருகன், இராமநாதபுரம்

மதுரை – மண்டபம் வழித்தடத்தில் நாளை சிறப்பு ரயில்கள் இயக்கம்…

பாம்பன் ரயில் பாலத்தை பலப்படுத்தும் பணிகளுக்காக 2019 ஜன.2 வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் வழித்தடத்தில் சென்னை ரயில்கள் நீங்கலாக, ஏனைய ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை – மண்டபம் மார்க்கத்தில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, மதுரை ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயில் நாளை (டிச.24) அதிகாலை 04: 30 மணிக்கு புறப்பட்டு காலை 07: 30 மணிக்கு மண்டபம் சென்றடையும். மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து நாளை காலை […]

20/12/2018 முதல் 02/01/2019 வரை ரத்தாகும் ரயில்கள்..

பாம்பன் ரயில் பாலம் பலப்படுத்தும் பணிகளுக்காக மதுரை – ராமேஸ்வரம் ரயில்வே பிரிவில், ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன  1. மானாமதுரை – ராமேஸ்வரம் பிரிவில் இயக்கப்படும் அனைத்து சாதாரண பயணிகள் ரயில்களும் 20.12.2018 முதல் 02.01.2019 வரை ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது 2. வண்டி எண் 16779/16780 திருப்பதி -ராமேஸ்வரம் – திருப்பதி வாரம் மும்முறை விரைவு ரயில் 22.12.2018 முதல் 02.01.2019 வரை மதுரை -ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது 3. வண்டி எண் 22622/22621 கன்னியாகுமரி -ராமேஸ்வரம் – கன்னியாகுமரி வாரம் மும்முறை விரைவு ரயில் 22.12.2018 முதல் 02.01.2019 வரை மதுரை – ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது 3.வண்டி எண் 56734/56735 மதுரை – செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் 2018 டிசம்பர் 20, 22, 23, 24, 26, 27, 29, 30, 31 மற்றும் 2019 ஜனவரி 2 ஆகிய தேதிகளில் மதுரை – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 4. வண்டி எண் மதுரை – பழனி  – மதுரை பயணிகள் ரயில்கள் 20.12.2018 முதல் 02.01.2019 வரை மதுரை – கூடல்நகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. செய்தி:- முருகன், இராமநாதபுரம்.

தமிழகத்தில் முழுமையாக முன்பதிவில்லா முதல் ரயில் அந்தோதயா எக்ஸ்பிரஸ் தொடங்கியது..

இன்று முதல் தாம்பரத்திலிருந்து செங்கோட்டை வரை முழுவதும் முன்பதிவு இல்லாதது அடிதட்டுமக்களுக்காக புதிய ரெயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பகல் நேரத்தில்…புதுக்கோட்டை வழியாக … Chair Car வசதியுடன்… முழுவதும் முன்பதிவில்லா புதிய ரெயில். தாம்பரம் – செங்கோட்டை ரெயில் எண் 16189. தாம்பரம் பு. நேரம் …….….07:00 செங்கல்பட்டு………………..07:30 விழுப்புரம் ………………….…09:20 மயிலாடுதுறை …………….11:35 கும்பகோணம் ………………12:10 தஞ்சாவூர்……………………..12:45 திருச்சிராப்பள்ளி………….14:25 *புதுக்கோட்டை……………..15:15* காரைக்குடி……………………16:00 மானாமதுரை………………..15:30 அருப்புக்கோட்டை…………18:15 விருது நகர்……………………18:45 சிவகாசி………………………..19:05 ராஜபாளையம்……………..19:40 சங்கரன்கோவில்………….19:55 தென்காசி……………………..20:35 செங்கோட்டை……………….22:30 செங்கோட்டை-தாம்பரம் […]

கீழக்கரையில் நாளை (19/12/2018) புதன் கிழமை மின் தடை..

கீழக்கரையில் நாளை (19/12/2018) – புதன் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.45 மணி முதல் மாலை 04.45 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர் கங்காதரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் கீழக்கரை நகர், ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை மற்றும் அதன் சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் மின்சார தடை இருக்கும் என தொிவிக்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு பதிவு – ஒரு முக்கிய அறிவிப்பு 2018 பிறப்பு சான்றிதழ் வழிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது…

01.01.2018 முதல் பிறக்கும் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பெற புதிய நடைமுறை அமலுக்கு வந்தது நாம் அறிந்த விசயம், ஆனால் இந்த வருடம்  அதன் சட்ட திட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிய வழிமுறையின் படி 01.01.2018 முதல் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் பெற PIC ME ID மற்றும் RCH NO ஐ நாம் ஆரம்ப சுகாதார நிலயத்தில் அல்லது அரசு மருத்துவ மணையிலோ அல்லது 102 என்ற இலவச எண்ணிற்க்கு போன் செய்தோ அந்த நம்பரை […]

நாடு முழுவதும் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…ஏடிஎம் சேவை முடங்கும் அபாயம்!!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் வரும் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள வங்கி ஊழியர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தவும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஐந்து நாட்கள், அதாவது டிசம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் […]

மதுரை மார்க்கம் ரயில் சேவையில் மாற்றம்…

மதுரை ரயில் நிலையத்தில் நடைமேடை ஒன்றில் இருப்பு பாதை தரை தளம் மேம்படுத்தும் பணிகள் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் சேவையில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 1. வண்டி எண் 56709 பழனி – மதுரை பயணிகள் ரயில் 13.12.2018 மற்றும் 14.12.2018 தேதிகளில் கூடல் நகர் மற்றும் மதுரை இடையே பகுதிவாரியாக ரத்து செய்யப்படுகிறது. 2. வண்டி எண் 56710 மதுரை – பழனி பயணிகள் ரயில் 14.12.2018 மற்றும் 15.12.2018 தேதிகளில் […]

பாம்பனில் புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றம்..

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றிரவுக்குள் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை (டிச.14) புயலாக வலுப்பெறும். இது ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!