கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும் மாலாக்குண்டு. இந்த இடத்தில் கீழை நகரக்கு குடீ நீர் கொண்டு செல்லப்படும் நீர் இறைக்கும் (Pumping station) நிலையம் செயல்பட்டு வந்தது. ஆனால் சரியான பராமரிப்பு இல்லாததால் கடந்த பல மாதங்களாக சிதிலமாகி உபயோகமற்ற நிலையில் இருந்து வந்தது. இன்று கீழக்கரை நகராட்சி ஆணையர் திரு. சந்திரசேகர் (பொறுப்பு), சுகாதார ஆய்வாளர் திரு. திண்ணாயிரமூர்த்தி, சுகாதார மேற்பார்வையாளர் திரு. மனோகரன் மற்றும் பல நகராட்சி ஊழியர்கள் இந்நிலையத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். […]