கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியீடு – மீறுவோர் மீது அபராதத்துடன் சட்ட நடவடிக்கை

கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனி நபர் வீடுகள், உணவு விடுதிகள், சிற்றுண்டி சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மையை மேம்படுத்தி கீழக்கரை நகராட்சியை முன் மாதிரி நகராட்சியாக மாற்றிட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் கெற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ன் படியும், தமிழ் நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 சட்டப் பிரிவுகள் 153, 156, 157, 160 மற்றும் 161 ன் […]

கீழக்கரை DSP மஹேஸ்வரி விருதுநகருக்கு பணியிட மாற்றம்

கீழக்கரை நகரில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் காவல் துறை துணை கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி வந்த DSP மஹேஸ்வரி தற்போது விருதுநகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழக்கரை நகருக்கு புதிய துணை கண்காணிப்பாளராக DSP பாலாஜி பொறுப்பேற்க உள்ளார். கீழக்கரை நகரில் கடந்த மூன்று ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு சாதனைகளை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரியை கீழக்கரை நகர் இழக்கிறது என்றே கூற முடிகிறது. கீழக்கரை […]

குடிநீர் தடையின்றி வழங்க வார்டு தோறும் பொறுப்பான அலுவலர் – சட்ட மன்றத்தில் அமைச்சர் வேலுமணி தகவல்

தமிழ்நாட்டில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுவதால் மாநகராட்சி பகுதிகளில் வார்டுகள் தோறும் குடிநீர் வழங்கும் பணியை மேற்பார்வையிட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலு மணி தெரிவித்துள்ளார். குடிநீர் பிரச்சனைக்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் இன்று திமுக உறுப்பினர் பிச்சாண்டி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:- தமிழக வரலாற்றில், கடந்த 140 வருடங்களில் இல்லாத வகையில், இந்த வருடம், பருவமழை […]

வங்கிகளில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பண பரிவர்த்தனை செய்தால் ரூ. 2 லட்சம் அபராதம் – ஏப்ரல் 1 முதல் அமலாகிறது

இந்தியா முழுவதும் கருப்புப் பணப் புழக்கத்தை ஒழிக்க மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பரில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என திடீரென அறிவித்து திண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ரொக்க பணப்பரிமாற்றத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தொடர்ந்து விதித்து வருகிறது. மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது 3 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பணப் பரிவர்த்தனையில் ஈடுபடக் கூடாது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்து இருந்தார். அவ்வாறு பண […]

கீழக்கரை தாலுகா சமூக நல திட்ட அலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் அரசின் நலத் திட்டங்கள் – தாசில்தார் தமீம் ராசா தகவல்

இராமநாதபுரம் மாவட்ட  வருவாய்த்துறை அறிவுறுத்தலின் படி கீழக்கரை தாலுகாவில் சமூக நல திட்ட அலுவலகத்தின் மூலமாக முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் உதவி பெறுவதற்கான தகுதிகள் மற்றும் வழிமுறைகளுக்கான தகவலை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம் ராசா நம்மிடையே பகிர்ந்துள்ளார். இது குறித்த மேலதிக […]

புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு – தமிழகத்தில் இருந்து ஹஜ் கமிட்டி மூலம் 3189 பேர் பயணிக்கலாம்

இந்திய அரசின் மத்திய சிறுபான்மை நல அமைச்சகத்தின் புனித ஹஜ் பயணத்துக்கான மாநில வாரியான இட ஒதுக்கீடு பட்டியல் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை இந்திய ஹஜ் கமிட்டி இணைய தளத்தில் பார்வையிடலாம். அந்த சுற்றறிக்கையில் மொத்த இந்திய மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 17,22,45,311 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்திய மாநிலங்கள் அனைத்துக்கும் சேர்த்து, யூனியன் பிரதேசங்கள் உள்பட புனித ஹஜ் பயணத்திற்கான இந்த வருடத்திற்கான மொத்த இட ஒதுக்கீடு 1,23,700 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் தமிகத்தில் இஸ்லாமியர்களின் […]

கீழக்கரை தாலுகாவில் புதிய வட்ட வழங்கல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ள பெண்மணி – சட்டப் போராளிகள் வாழ்த்து

கீழக்கரை தாலுகாவிற்கு புதிய வட்ட வழங்கல் அலுவலராக B உமா ராணி நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்னர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதன்மை வருவாய் அதிகாரி உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பொறுப்பேற்றிருக்கும் இவரை இன்று 08.03.17 கீழக்கரை சட்டப் போராளிகள் தளம் சார்பாக நேரடியாக சந்தித்து வாழ்த்துக்கள் பகிரப்பட்டது. கீழை நியூஸ் வலை தளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ”கீழக்கரை நகருக்கு சிறந்த முறையில் பணியாற்ற காத்திருக்கிறேன். ரேஷன் […]

ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் வழிமுறை எளிதாகியது – இனி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் மொத்தம் 63 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்டிஓ) உள்ளன. இதுதவிர, அறுபதுக்கும் மேற்பட்ட யூனிட் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர். சராசரியாக ஓராண்டுக்கு 6,210 பேர் புதியவாகனங்களைப் பதிவு செய்கின்றனர். வாகனங்களுக்குப் பதிவு எண்வழங்குதல், ஆட்டோ உரிமையாளர்களின் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளும் இங்கு நடக்கின் றன. இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி தமிழகம் முழுவதும் கடந்த 1-ம் தேதி அமலுக்கு […]

அனைத்து முஸ்லீம் ஜமாத்தினருக்கும் ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்ட அழைப்பு – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடி சுகாதார பகுதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்லீம் ஜமாத்தினருக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி சம்பந்தமான விழிப்புணர்வு கூட்ட அழைப்பினை, துணை இயக்குனர், சுகாதார பணிகள் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இன்று 02.03.17 மாலை 4 மணியளவில் நடக்கவிருக்கும் இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற இருப்பதாகவும், அனைத்து முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகளும் தவறாது கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஏப்ரல்-1 முதல், ரேஷன் கார்டுக்கு மாற்றாக, புதிய ‘மின்னணு குடும்ப அட்டை’ – ஸ்மார்ட் கார்டு

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் இப்போதுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை 80 சதவீதம் பேர் ஆதார் விவரங்களை பதிவு செய்துள்ளனர் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் சென்னை சேப்பாக்கம், எழிலகம் கூட்டரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களுடன் மாநில அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் […]

சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றம்…

அறிவிப்பு.. சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.00 மணிக்கு வந்து கொண்டிருந்த ரயில் எண்.16101 இனி இரவு 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 7.25க்கு இராமநாதபுரம் வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

கீழக்கரையில் ஆன்லைன் மூலம் ரூ.50000 திருட்டு – வங்கி ATM கார்டு வைத்திருபோர் உஷார்

கீழக்கரையில்ஆன்லைன் மூலம் ரூ.50000 திருட்டு – வங்கி ATM கார்டு வைத்திருபோர் உஷார் கீழக்கரை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் சேமிப்பு கணக்கினை வைத்திருக்கும் கீழக்கரை மேலத் தெருவை சேர்ந்த ஒருவரின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஆசாமி ரூ.50000 ஐ ஆன்லைன் மூலம் திருடியுள்ளது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர் கீழை நியூஸ் வலைத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ”கடந்த ஒரு வாரம் முன்னதாக எனது மொபைலுக்கு பேசிய ஆசாமி.. தான் சம்பந்தப்பட்ட […]

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவிப்பு வெளியீடு…

இன்று (08-02-2017) கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலர் தமீம் ராசா வெளியிட்டுள்ள அறிக்கையில் இது வரை ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் கீழக்கரை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஆதாரத்துடன் மனு செய்தவர்களுக்கு 31-01-2017 வரை அத்தியாவசியப் பொருட்கள் வழங்க உத்திரவிடப்பட்டது. அவ்வாறு மனு செய்தவர்கள் வரும் 09-02-2017 மற்றும் 10-02-2017 ஆகிய இரு தேதிகளில் தங்களது ஆதார் அட்டைகளை இணைத்துக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு பதிய தவறும் […]

நகராட்சி அறிவிப்பு

கீழக்கரை 21வது வார்டு மக்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும்  ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் ….முக்கிய அறிவிப்பு….

கீழக்கரையில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்..

கீழக்கரையில்  சமீப காலமாக பெரியவர் முதல் சிறுவர்கள் வரை டெங்கு மற்றும் பல வகையான காய்ச்சலில் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.  இது சம்பந்தமாக பொது மக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் நகராட்சி நிர்வாகத்திற்கு கொசுவைக் கட்டுப்படுத்த வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர்.  இந்த விவகாரத்தில் வீரியத்த தன்மையை கருத்தில் கொண்டு  நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறையும் இணைந்து கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் கூறுகையில் ” கொசுக்களை கட்டுப்படுத்த மதுரை மண்டல அலுவலக […]

போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 2ம் தேதிக்கு மாற்றம்..

சில தினங்களுக்கு முன்பு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதிகளில் நடைபெறும் என்று அரசாங்கத்தால் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.  தற்பொழுது நாட்கள் மாற்றப்பட்டு மார்ச் 5 மற்றும் ஏப்ரல் 2நம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

உள்ளூர் விடுமுறை இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசாமி கோவிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11.01.2017 மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாகும்.  அதனை ஈடுகட்டும் வகையில் 28.01.2017 சனிக்கிழமை வேலை நாளாகும். – டாக்டர் நடராஜன், மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம் மாவட்டம்.

2017ம் ஆண்டுக்கான ஹஜ் விண்ணப்பம்-ஒரு அறிவிப்பு

🕋 *ஹஜ் 2017/1438* 🕋 ✈️ இவ் வருடம் அதாவது ஹிஜ்ரீ 1438 = 2017 க் கான ஹஜ் யாத்திரை விண்ணப்பங்கள் அதாவது Haj Application Form இன்ஷா அல்லாஹ் *2/1/2017 திங்கள்கிழமை* முதல் வினியோகம் செய்யப்பட உள்ளது . ✈️ அதாவது ஹஜ் விண்ணப்பங்களை 1- 13/7 ரோசி டவர் நுங்கம்பாக்கம் , சென்னை – யில் நேரிலோ …… அல்லது 2- www.hajcommittee.gov. in என்ற வெப்சைட் மூலம் பதிவிறக்கம் செய்தோ….. ……. […]

போலியோ சொட்டு மருந்து முகாம்…

நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கும் மையம் செயல்படும். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், […]

பசுமையடையுமா கீழக்கரை.. மக்கிப் போகுமா ப்ளாஸ்டிக் .. 1ம் தேதி முதல் கீழக்கரையில் ப்ளாஸ்டிக் பை தடை..

கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 21வார்டுகள் உள்ளன. தற்போது வரும் 1ம் தேதி முதல் கீழக்கரைக்கு உட்பட்ட நகராட்சியில் ப்ளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு தடை செய்யப்படுகிறது என்று நகராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. கீழக்கரை இந்தியன் மார்ட் அப்துல் சமது அவர்கள் கூறுகையில், இந்த அறிவிப்பு போதிய அவகாசம் இல்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், வெறும் அறிவிப்பால் இதைக் கட்டுப்படுத்த முடியாது காரணம் அருகில் உள்ள […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!