வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு…

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இதன் கீழ் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஆகிய மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.

இப்பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக அசோகன் பணியாற்றி வந்தார். கடந்த 2015-ல் போலி ஆவணம் மூலம் 6 பேரை பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்த்து உள்ளார். இது தொடர்பாக ஆட்சி மன்ற குழு முன்னாள் உறுப்பினர் இளங்கோவன். சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுபடி வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் அசோகன், போலி பணி ஆணையில் சேர்ந்த ஆனந்த பாபு, எழிலரசி, ஜெயந்தி, விஜயகிருஷ்ணன், தசரதன், அன்பரசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்

 

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!