கீழக்கரையில் இந்து, முஸ்லிம், கிருஸ்தவர்கள் அண்ணன், தம்பிகளாக மாமன், மச்சான்களாக சமூக ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த 15.5.2019 அன்று கொடைக்கானலில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பாஜக தேசிய செயலாளர் H.ராஜா கீழக்கரையில் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அமைதி பூங்காவாக திகழும் கீழக்கரையில் மத துவேசத்தை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
அவரின் இந்த பேச்சு தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதால் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யுமாறு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை அனைத்து கிளை சார்பில் இன்று கீழக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.
அனைத்து ஜமாத் மற்றும் இயக்கங்களும் H. ராஜா மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வேண்டுமென்று தவ்ஹீத் ஜமாத் கேட்டு கொள்கிறது.





You must be logged in to post a comment.