இன்றைய காலகட்டத்தில் பெரிய பணக்காரர்கள் மற்றும் வசதி வாய்ப்பு மிகுந்தவர்களின் வீட்டுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளிகள் மிகவும் சிரமத்துடன் வருவதை பார்த்திருக்கிறோம். அதே சமயம் சாதாரண குடிசை வீட்டில் வசிக்கும் தொண்டன் வீட்டுக்கு தன் செல்வாக்கை மக்கள் மத்தியில் நிறுத்த வேண்டும் என வரும் அரசியல்வாதியை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த அப்துல்லாஹ் சுல்தான் அப்துல்லாஹ் அல் சப்பாஹ் என்பவர் அமீரகத்தில் உள்ள கார்ஸ் டாக்ஸி (CARS TAXI) நிறுவனத்தின் தலைமை அதிகாரி (CEO) ஆவார். இவர் தன் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டுத் துறையில் வேலை பார்க்கும் கீழக்கரையைச் சார்ந்த நல்ல இபுராஹிம் என்பவரின் வீட்டு திருமணத்திற்கு இன்று (24-06-2018) இந்தியாவிற்கு வருகை தருகிறார் என்பது ஆச்சரியப்படும் விசயம் மற்றும் இவரது வருகை பாராட்டுக்குரியதுமாகும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









