மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு அருகே கார் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு..

மதுரை மாவட்டம் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தியார்குண்டு அருகே சின்னமனூரில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது மனைவி இருவரும் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஒரு துக்க நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட வெங்கடேஸ்வரன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியும் கீழே இறக்கிவிட்ட அடுத்த வினாடியே மிகப்பெரிய அளவில் தீ எரிய ஆரம்பித்து விட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் தங்களது கடையில் உள்ள தீயணைப்பான் கருவியைக் கொண்டு தீயை அணைக்க முற்பட்டனர்.  எனினும் தீயை அணைக்க முடியாத காரணத்தால்,  தகவல் அறிந்து திருமங்கலம் தீயணைப்பு துறையினர் விரைவாக வந்து தீயை அணைத்தனர்.

அதிஷ்டவசமாக இதில் காரில் பயணம் செய்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!