ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் நடைபெறுவதையொட்டி அதிகாலை முதல் வாக்காளர் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதன்படி இந்த நிலையில் 12 மணி நிலவரப்படி 25% வாக்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார் மேலும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெண்கள் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு பின்னர் அங்கு உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பார்வையிட்டு ராமேஸ்வரம் செல்ல இருக்கிறார். அதிமுக ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






You must be logged in to post a comment.