திருப்புல்லாணியில் தென்னை வளர்ச்சி வாரிய மாதிரி செயல் விளக்க திடல் விண்ணப்ப முகாம்..

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் நயினாமரக்கான் கிராமத்தில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தென்னை மாதிரி செயல் விளக்கதிடல் மானிய விண்ணப்பங்கள் சேகரிப்பு முகாம் மற்றும் தொழில் நுட்ப முகாம் நடந்தது. இதில் திருப்புல்லாணி, களிமண்குண்டு, வண்ணாண்குண்டு, பத்ராதரவை, நயினாமரக்கான், பெரியபட்டினம், கொட்டியக்காரன்வலசை, தினைக்குளம், பருத்திக்காட்டுவலசை கிராம தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். தென்னை வளர்ச்சி வாரிய திட்டங்கள் குறித்து தென்னை வளர்ச்சி வாரிய தொழில் நுட்ப அலுவலர்கள் முருகானந்தம், பாரதிபிரியன் ஆகியோர் எடுத்துரைத்தனர். தென்னை பயிர் தொழில் நுட்பங்கள் குறித்து ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வல்லிக்கண்ணன் எடுத்துரைத்தார். 

தென்னை பயிருக்கு விவசாய கடன் அட்டை பெறுதல்  குறித்து  திருப்புல்லாணி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அமர்லால் எடுத்துரைத்தார். தென்னை வளர்ச்சி வாரிய மாதிரி செயல் விளக்க திடல் மானியங்களை பெறுவதற்காக திருப்புல்லாணி தென்னை விவசாயிகள் நலக்குழ அமைக்கப்பட்டது தலைவராக தினைக்குளம் ஜாகிர் உசைன், செயலராக நயினாமரக்கான் கணேசன், பொருளாளராக பத்ராதரவை த முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த குழுவினர் மூலம் விண்ணப்பங்களை அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க செயலாளர் மணிமாதவன் விவசாயிகளை ஒருங்கிணைத்தார். மாதிரி செயல் விளக்க திடல் அமைக்க  நுற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்தனர். முகாமில் விண்ணப்பம் அளிக்க இயலாதோர் உச்சிப்புளி அரசு தென்னை நாற்றுப்பண்ணையில் அக்.11ல் நடைபெறும் தென்னை மாதிரி செயல் விளக்க திடல் மற்றும் தொழில் நுட்ப முகாமில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன் பெற வேளாண் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!