சென்னை மீனாட்சி இயன்முறை மருத்துவக் கல்லூரி மற்றும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இலவச இயன்முறை மருத்துவ முகாம் சிறப்பாக நிறைவடைந்தது.
கடந்த மூன்று நாட்களாக (நவம்பர் 2,3 மற்றும் 4 ம் தேதிகளில்) நடைபெற்ற இம்முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இம்முகாம் சிறப்பாக நடைபெற இடம் வழங்கி ஆதரவு அளித்த வடக்குத் தெரு ஜமாஅத் நிர்வாகத்தினருக்கும், அத்துடன் ஊடக மற்றும் பத்திரிக்கைத் துறை நண்பர்களின் ஒத்துழைப்பிற்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் அனைத்து ஏற்பாடுகளையும் அனைத்து ஜமாஅத் இளைஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.



You must be logged in to post a comment.