உசிலம்பட்டி வட்டார வள மையம் அலுவலகத்தில் மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இணைந்து நடத்தும் 0.18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.மதுரைமாவட்டம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் உசிலம்பட்டி வட்டார வள மையத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் வழிகாட்டுதலின் படி மாற்றுத் திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் உதவி திட்ட அலுவலர் சரவண முருகன் மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமி நாதன் தலைமையிலும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் திலகவதி மற்றும் தேவி ,அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது .உடன்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சூரிய கலா , வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜ், உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் மஞ்சு, ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இயன் முறை மருத்துவர்கள் மதுரை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 70 மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.