கடையநல்லூர் மெயின் ரோட்டில் சென்னை ஹாட் பப்ஸ் என்னும் பெயரில் பேக்கரி கடை இயங்கி வருகிறது. சென்னை ஹாட் பப்ஸ் கடையில் 23.02.19 இன்று மதியம் கடையநல்லூரை சேர்ந்த ரபீக் என்வர் தனது நான்கு வயது மகளுக்கு கேக் வாங்கியுள்ளார். வீட்டிற்கு வந்து மகளுக்கு கொடுத்து, மகள் அதை பாதி சாப்பிட்ட நிலையில் அதில் பெரிய அளவிலான புழுக்கள் நெளிவதைக் கண்டு தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை உடனடியாக கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சென்னை ஹாட் பப்ஸ் என்னும் பெயரில் இயங்கும் அந்தக் கடையில் உடனடியாக நகராட்சி அலுவலர்கள் சென்று சோதனையிட்டதில் அதே வகை கேக்கில் புழுக்கள் இருப்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.