குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் : 1110 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியுடன் பேரணி : பல்வேறு கட்சியினர் ஆதரவு :

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், NPR, NRC போன்றவற்றை திரும்பப் பெறக்கோரியும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு இசுலாமிய அமைப்புகள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரியகுளத்தில் ரஹ்மத் பள்ளிவாசலில் தொடர்ந்து 17 வது நாளாக இசுலாமிய மக்கள் தொடர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA, NPR, NRC போன்ற சட்டங்களை திரும்பப்பெறும் வரையிலும், தமிழக சட்டமன்றத்தில் மேற்கண்ட சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் வரையிலும் அறவழிப் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இசுலாமிய மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் டெல்லியில் வன்முறையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை கைது செய்ய வலியுறுத்தியும், டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தியும் 1110 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியுடன் இஸ்லாமியர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். இக்கண்டன ஊர்வல பேரணியில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர், அனைத்து இசுலாமிய இயக்கங்கள் உட்பட பல் வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கு பெற்றனர்.

இவண். சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!