CAA சட்டம் அமல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..

CAA சட்டம் அமல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..

குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றியது. இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது.

நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் இதனை எதிர்க்க பாஜகவின் பாதம் தாங்கியான அதிமுக ஆதரித்து வாக்களித்ததாலே இச்சட்டம் நிறைவேறியது.

இந்த தேர்தலில் அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போனதால், CAA சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி.

அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பாஜகவையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என கூறியுள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!