மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில் பாஜக பொருளாதார பிரிவு சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேவ்ஜில் தலைமை வைத்தார் மாவட்ட செயலாளர் முனியாண்டி வரவேற்புரை கூறினார் மற்றும் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம் எஸ் ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பொருளாதாரப் பிரிவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய மாநில பொருளாதார பிரிவு செயலாளர் எம் எஸ் ஷா கூறும்போது-கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியின் சாதனையை விலக்கி பொதுமக்களுக்கு கூறுவதே இந்த கூட்டத்தின் நோக்கம்.வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்பெற்று மீண்டும் பிரதமராகமோடி வரவேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்
கூட்டம் நடைபெற்றது .மேலும் செய்தியாளர் சந்திப்பில் கூறும் போது பாஜக கட்சியின்
மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாலையில் இதனை பொது மக்களுக்கு விளக்க பஜக பொருளாதார அணி பிரிவு சார்பில் திருப்பரங்குன்றம் 16 மண்டபத்தில் பத்தாண்டு கால ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.மேலும் திமுக 516 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து செயல்படுத்தவில்லை எனக் கூறி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.திமுக தேர்தல் வாக்குறுதி அளித்ததில் பால் விலையை குறைப்போம் மின் கட்டணத்தை குறைப்போம் மின் கட்டணத்தை மாதாந்திர முறைக்கு மாற்றுவோம் மேலும் மதுக்கடைகளை ஒழிப்போம் எனக் கூறினர்.தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளது.பள்ளிக் குழந்தைகள் முதல் பல்வேறு பிரிவினர் போதைப் பொருட்களால் சீரழிகின்றனர்.இதனை கண்டித்து மாநில தலைவர் அண்ணாமலை ஒரு வாரத்தில் போதைப் பொருளை ஒழிக்க கூறியுள்ளார்.பொருளாதாரப் பிரிவு என்பது ஒவ்வொரு மனிதனுடைய பொருளாதார வளர்ச்சியும் எவ்வாறு உள்ளது என்பதை கணக்கிடுவது தான் இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் மூன்று புள்ளி ஐந்து டிரில்லியன் இருந்தது தற்போது 5 டிரில்லியன் அளவிற்கு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.பா ஜ க சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை வேலாயுதம் என்பவருக்கு ஒதுக்காவிட்டால் பத்தாயிரம் பேரை திரட்டி திருமங்கலம் டோல்கேட்டில் எதிர்ப்பு தெரிவிப்பேன் எனக் கூறியது பற்றிய கேள்விக்கு-பாஜகவை பொறுத்தவரை தேர்தல் சீட் கிடைக்க யாருக்கும் உத்தரவாதம் அளிக்க மாட்டார்கள் கட்சி மேல் இடம் பார்த்து முடிவு செய்து அவர்களுக்கு சீட் வழங்கும் அண்ணாமலையாக இருந்தாலும் யாருக்கும் உறுதி வழங்க மாட்டார்கள்.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு-மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை துவங்க 1800 கோடிக்கு ஜப்பானில் சைத்தான் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கினோம் இதற்கிடையில் கொரோனா வந்துள்ளதால் தற்போது விலைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது தற்போது பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி வரும் ஆண்டில் மதுரையிலிருந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.சி ஏ ஏ சட்டம் குறித்து அதிமுக கருத்து தெரிவித்தற்கு சிஏஏ சட்டம் குறித்து பேசுவதற்கு அதிமுக விற்கு அருகதை இல்லை.அதிமுகவின் நிலைப்பாடு மிகவும் மோசமாக உள்ளது அவர்களுக்கு இரட்டை இலை கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது இரட்டை இலை சின்னம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளார்கள் அதிமுகவின் சிஏஏ பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை.அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கா மல் இருக்க பாஜக தடை ஏற்படுத்துகிறதாநிச்சயமாக கிடையாது கோர்ட் என்பது தனி பாஜக என்பது தனி அரசு என்பது தனி மூன்றையும் ஒன்று சேர்க்காதீர்கள் என ஷா கூறினார்..
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









