சந்திராயன்-2 செயற்கைக்கோள் செப்டம்பர் 7-ம்தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் – மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குனர் மூக்கையா பேட்டிதூத்துக்குடி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ சமீபத்தில் சந்திராயன்-2செயற்கைகோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இந்த திட்ட பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய திட்ட இயக்குனர் மூக்கையா தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.
தொடர்ந்து விஞ்ஞானிக்கு மூக்கையா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில், சந்திராயன்-2செயற்கைக்கோள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் 6 ஆயிரம் கிலோமீட்டர் அதிகமான தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.சந்திராயன்-2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவ ஏற்கனவே திட்டமிட்டிருந்த நேரத்தில் கடைசி கட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து கோளாறு சரிசெய்யப்பட்டு சந்திராயன்-2 செயற்கைக்கோள் மீண்டும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. சந்திராயன்-2 செயற்கைக் கோளானது மூன்று நிலைகளில் தனது ஆய்வினை மேற்கொள்ளும் முதல் நிலையான ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் எனும் நிலை தனியே பிரிந்து நிலவின் தென்துருவத்தில் செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை 2.43 மணிக்கு தரையிறங்கும்.அதனைத் தொடர்ந்து அதிலிருந்து ரோவரானது தனியே பிரிந்து நிலவில் 500 மீட்டர் பரப்பளவில் ஆய்வினை மேற்கொள்ளும். லேண்டர் பகுதி நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியதும் பெங்களூருவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திற்கு சமிக்கை அனுப்பும். அதனைத் தொடர்ந்து நிலவின் பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்படும்.மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான எரிபொருள் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. வருங்கால திட்டங்களுக்கும் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி,ஜிஎஸ்எல்வி மார்க்-3 உள்ளிட்ட மூன்று எஞ்சின்களை கொண்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும்.அடுத்த கட்டமாக மனிதனை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ளும் திட்டமான “ககன்யான்” திட்டத்தை மேற்கொள்ளும் பணியில் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட உள்ளது என்றார்.பேட்டியின் போது அவருடன் இஸ்ரோ குழும இயக்குனர் (குரூப் டைரக்டர்) D.P. சுதாகர், இஸ்ரோ தலைமை அதிகாரி (பொது நிர்வாகம்) தங்க மாரியப்பன், இஸ்ரோ எம்ப்ளாய்ஸ் யூனியன் தலைவர் கணேசன், செயலாளர் தனபாலன் ஆகியோர் உடனிருந்னர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









