மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் முதன் முறையாக உயர் இரத்த ஓட்ட மூளை பைபாஸ் அறுவை சிகிச்சை (High Flow Brain Bypass Surgery) மேற்கொள்ளப்பட்டது. 50 வயது நிரம்பிய பெண்மணி, அடிக்கடி தலைவலி மற்றும் இரட்டை பார்வை கோளாறால் அவதிபட்டு வந்தார், அதற்காக அவர் ஒரு கண் மருத்துவரை அணுகினார். சிக்கல் கண்ணில் இல்லை என்றும், ஆனால் மூளைக்குச் செல்லும் முக்கிய இரத்த நாளத்தில் சிக்கல் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அதனால் உயர்தர சிகிச்சைக்காக அவர் எங்களிடம் பரிந்துரைக்கப்பட்டார்.
மூளை ஸ்கேன் மூலம் அவருக்கு ஒரு மாபெரும் இரத்த நாளத்தில் வீக்கம் (aneurysm) இருப்பதைக் கண்டுபிடிக்கப்பட்டது, அதாவது, அந்த இரத்த நாளம் அவரது மூளையில் ஆழமாக அமைந்திருந்தது, அது அவரது கண்களை பாதித்திருந்தது. இந்த அனீரிஸத்தின் கடினமான விஷயம் என்னவென்றால், அது அவரது கண்களைக்k கட்டுப்படுத்தும் நரம்புகளை சுருக்கிக் கொண்டிருந்தது, மேலும் அது சிதைந்து பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடுவதாகவும் அமைந்திருந்தது. மூளை செயல்பாட்டினை மதிப்பிடுவதற்கு நாங்கள் ஒரு சிறப்பு சோதனையை மேற்கொண்டோம், இதன் மூலம் இரத்த நாள வீக்கத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்டால், அவரது இடது மேல் மூட்டு மற்றும் கீழ் மூட்டுகளைப் பயன்படுத்த இயலாமை ஆகியவற்றைக் காட்டியது. சிகிச்சையின் ஒரே உறுதியான வழி இரத்த நாளத்தை முழுவதுமாக அகற்றுவதே என்பதை நாங்கள் அறிவோம். மேலும் மற்ற வகை சிகிச்சைகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதய பைபாஸைப் போலவே மூளை பைபாஸ் செய்ய முடிவு செய்தோம். இந்த சிகிச்சையில், ஒரு மேம்பட்ட எண்டோஸ்கோபிக் நுட்பத்தைப் பயன்படுத்தி நோயாளியின் காலில் இருந்து இரத்தநாளத்தை எடுத்து பின்னர் சாதாரண இரத்த நாளத்தில் அனுமதித்து தைக்கப்பட்டது.
மதுரை மற்றும் தெற்கில் இந்த நடைமுறை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும், மேலும் சிக்கலான நடைமுறையைச் செய்யக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்களை கொண்ட நாடு முழுவதும் உள்ள ஒரு சில மருத்துவ மையங்களில் மதுரை அப்போலோ மருத்துவமனையும் ஒன்றாகும். 24 நேர தீவிர கண்காணிப்புக்கு பிறகு அவர் எந்த சிரமமின்றி இயல்பு நிலை திரும்பினார். இந்த முறை தென் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ஷியாம் இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தார். சிகிச்சைக்கு பின்னர் நோயாளி நலமுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கிறார என்று கூறினார்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.