ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக, திமுக தீவிர பிரச்சாரம்…

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு..

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ மோகன் போட்டியிடுகின்றார். மோகனுக்கு ஆதரவாக வர்னர்கிரி, சுந்தரலிங்கம்காலனி, முப்பிலிபட்டி, புதுப்பச்சேரி, செவல்குளம் உட்பட பல்வேறு கிராமங்ககளுக்கு சென்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். ஒவ்வொறு கிராமத்திலும் அமைச்சர்களுக்கும் வேட்பாளருக்கும் கிராம மக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். பல்வேறு கிராமங்களில் நீண்ட வரிசையில் நின்று பெண்கள் ஆராத்தி எடுத்தனர். ஒவ்வொறு கிராமத்திலும் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறி அமைச்சா் வாக்கு சேகரித்தனர். மேலும் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி, சமுதாய கூடம் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அமைச்சா்கள் தெரிவித்தனர்.

மேலும் திமுக வேட்பாளர் சண்முகையா நில மோசடி பேர்வழி என்றும் அமமுக வேட்பாளர் சுந்தரராஜ்25கோடியை வாங்கிக்கொண்டு ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு துரோகம் செய்துவிட்டு மீண்டும் வாய்ப்பு கேட்டு வருகின்றார் என்றும் ஏழை வீட்டு பிள்ளை அதிமுக வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் பேசினர். பல்வேறு கிராமங்களில் கோரிக்கை மனுக்களை கிராம மக்கள் அமைச்சர்களிடம் கொடுத்தனர். வாக்கு சேகரிப்பின் போது, முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், சாத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர், வார்டு செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், விருதுநகர் மாவட்ட கழக ஒன்றிய செயலாளர்கள்,நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கழகம் நிர்வாகிகள், ஓட்டப்பிடாரம் தொகுதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ஓட்டப்பிடாரம் : திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு ஆதரவாக கீதா ஜீவன் MLA வாக்கு சேகரிப்பு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி  மாநகராட்சி, 1, 2, 3வது வார்டு  பகுதிகளான அம்பேத்கர் நகர்கேடிசி நகர்,முத்தம்மாள் காலனி,சங்கரபேரி, பண்டரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து வடக்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் கீதாஜீவன்.MLA  தலைமையிலான திமுகவினர்  அப்பகுதி மக்களிடம் சென்று வீதி வீதியாகவும், வீடு வீடாக சென்று  வாக்கு சேகரித்தனர். உடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி,மாநகர செயலாளர் ஆனந்தசேகரன்  மற்றும்  கட்சி தொண்டர்கள் அனைவரும் திரண்டு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!