தமிழக அரசு கருவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்ம திட்ட திறனூட்டல் மாநாடு இராமநாதபுரத்தில் இன்று ( 17.9. 18) நடைபெற்றது.
தமிழக அரசு நிதி மேலாண் தொடர்பான அரசுப்பணிகள் திறம்பட நடைபெறவும் கருவூல பணிகளை மேம்படுத்தும் பொருட்டு சிறப்பு வழிமுறைகளை கையாண்டு மனித வள மேலாண்மையை ஒருங்கிணைத்து நிதி மற்றும் மனித வள மேலாண் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக அரசு ரூ.288.91 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டதை செயல்படுத்த முன்னோடி தனியார் நிறுவனங்களான அக்சேன்சர், விப்ரோ, பிரைஸ்வாட்டர், ஹவுஸ் கூப்பர்ஸ் ஆகியவற்றுடன் மாநில கணக்காயர், ரிசர்வ் வங்கி, முதன்மை வங்கிகள் பொதுக்கணக்கு கட்டுப்பாட்டாளர் ஆகிய பங்கேற்பாளர்கள் இணைந்து செயல்டுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை அமல்பபடுத்துவதன் மூலம், அரசு பணியாளர்களின் பணி .பதிவேடு எளியமுறையில் கணினி மயமாக்கப்படும். தமிழ்நாடு மற்றும் டில்லியில் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகத்தில் சம்பளம் பெற்று வழங்கும் 29 ஆயிரம் அலுவலர்களின் பணிச்சுமை குறைக்கப்படும் . கருவூலங்கள் காகிதமற்ற அலுவலகமாக மாற்றி எங்கும் அலையாமல் இணையம் வழியாக அனைத்து அரசுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு ஊதியம் வழங்கவும் அமல்படுத்தப்படும். இத்திட்டம் வரும் நவம்பர் மாதம் அமல்படுத்தப்பட உள்ளதால் ஒரு லட்சத்திற்கும் மேலான பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத் திட்டம் அமல்படுத்துவதன் சிறப்புகள் குறித்த திறனூட்டல் மாநாட்டில் தமிழக கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையர். தென்காசி ஜவஹர் பேசினார். அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதிலும் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள் ,சார்நிலை கருவூலங்கள் மூலம் கடந்த நிதி ஆண்டில் ரூ.1,55,824 கோடி வரவினங்கள், ரூ.1,70, 256 கோடி செலவினமாக அரசு நிதியானது கையாளப்பட்டுள்ளது. ம ஓய்வூதிர்களின் சிரம மங்களை முற்றிலும் குறைக்க பொதுத்துறை வங்கி மூலம் வழங்கப்பட்ட ஓய்வூதியம் இனி கருவூலங்கள் மூலம் வழங்கப்படும். அரசு பணியாளர்களின் பணி பதிவேடு கணினி மயமாக்கி சம்பள பரிமாற்றங்களை எளிமையாக்க இத்திட்டம் அமையும். காலை பில் மாலையில் என்ற உன்னத நிலை எட்டப்படும் என்றார்.
இம்மாநாட்டில் கீழக்கரை சீதக்காதி அறக்கட்டளை துணை பொது மேலாளர் ஷேக் தாவூது, ஹாம்வே ரேடியோ துணை பொது மேலாளர் அகமது ரிபாய், தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா தாவூது, 80 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கிய இடிஏ நிறுவன நிர்வாக இயக்குநர் காலித் ஏகே புகாரி, ஆசிரியர் (ஓய்வு) முனியசாமி, மென்பொறியாளர் செய்யது, முன்னாள் ஊராட்சி தலைவர் உத்தண்டவேலு, வேளாண் இணை இயக்குநர் (ஓய்வு) முத்து, பி எஸ் என் எல் முதன்மை பொறியாளர் (ஓய்வு) கணேசமூர்த்தி ஆகியோரின் சேவை, பணியை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காவல் துணை தலைவர் காமினி, கருவூலத்துறை கூடுதல் இயக்குனர் மகாபாரதி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன, வன உயிரின காப்பாளார் அசோக்குமார், மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் ஜானி டோம் வர்க்கீஸ், கருவூலம் மற்றும் கணக்கு துறை மதுரை மண்டல இணை இயக்குநர் தவசு கனி, சம்பள கணக்கு அலுவலர்கள் முத்து பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கருவூல அலுவலர் கபீப், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முத்துமாரி, சுகாதார துறை இணை இயக்குநர் மலர்க்கொடி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி கருவூல அலுவலர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













