ஆலங்குளம் தனியார் கல்லூரி மாணவர்கள் பேருந்தினுள் குத்தாட்டம்-பேருந்தில் சினிமா பாடல்கள் ஒலிப்பதை தடை செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் மினி பேரூந்தில் ஒலித்த சினிமா பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மாணவர்களை அழைத்து வந்த ஆலங்குளம் உதவி ஆய்வாளர் கிருஷ்ணன் நீங்கள் எல்லாம் வருங்கால IPS,IAS எங்களது காவல்துறைக்கு எனக்கே மேல் அதிகாரியாக வரலாம் என ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் பொதுமக்களிடம் சற்று சலசலப்பினை ஏற்படுத்தியது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கல்லூரி, பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வேன், மினி பேரூந்துகளில் ஒலிக்கும் சினிமா குத்து பாடலை தடை செய்ய வேண்டும். ஒலிபெருக்கியை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.பெரும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!