மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது, இதனால் உசிலம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.,இந்த பேருந்து நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியதால் பேருந்துகள் வந்து செல்வதில் பெரும் சிரமத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.,இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இது குறித்து அறிந்த சமூக ஆர்வலரும், திமுக செயற்குழு உறுப்பினருமான இளமகிழன், தனது சொந்த செலவில் மண் அடித்து ஆங்காங்கே உள்ள பள்ளங்களை சரி செய்த சம்பவம் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.இதனால் பொதுமக்கள் பள்ளத்திலுள்ள மழை தண்ணீரில் மாட்டிக்கொள்ளாமல் சிரமின்றி பேருந்து நிலையத்திற்கு செல்வதாக பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.