ராமநாதபுரத்தில்  அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு  இலவச பேருந்து பயண அட்டை

இராமநாதபுரம், ஆக.28 – 

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 414 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரித்து உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன்  உத்தரவிட்டார்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர் 3 பேருக்கு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்குவதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வழங்கினார். சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) பூவராகவன், மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!