சோழவந்தான் அக் 5. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அரசு ஆண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. பள்ளி விடும் நேரங்களிலும் துவங்கும் காலை நேரங்களிலும் அதிகப்படியான கூட்டம் பேருந்து முழுவதும் நிரம்பி வழிவதால் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. . இதனால் பொதுமக்கள் மிகுந்த மனச்சுமையில் உள்ளனர். மேலும் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதற்கு பள்ளி மாணவர்களிடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சோழவந்தான் பகுதியில் காவல்துறை போக்குவரத்து துறை பள்ளி ஆசிரியர்கள் கலந்து ஆலோசித்து அதிகப்படியான பேருந்துகள் விட வேண்டும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் பள்ளி ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.