அடிக்கடி ஏற்படும் அரசு பேருந்து கோளாறினால் அவதிப்படும் பொன்னகர மக்கள்..

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சரகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அடிக்கடி கோளாறு ஏற்படுவதினால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

உதாரணமாக சமீபத்தில் சின்னம்பள்ளி அருகே ஆஞ்சநேயர் கோயில் என்னுமிடத்தில் அரசு பஸ் கோளாறு ஏற்பட்டு பயணம் தடங்கள் ஆனது. அதே போல் பென்னாகரத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மதியம் 12.30மணியளவில் மேச்சேரியிலிருந்து வந்த அரசு பஸ் திடீரென ஆஞ்சநேயர் கோயில் என்னுமிடத்தில்  கோளாறு ஏற்பட்டு நின்றுவிட்டது.

சுமார் ஒருமணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பஸ்சை சரிசெய்தனர். இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பெரிதும் பாதிப்படைந்தனர். இந்த வழிதடங்களில் அரசு பஸ்சில் அடிக்கடி ரிப்பேர் ஆடுவது குறிப்பிடத்தக்கதாகும். இதை உடனடியாக போக்குவரத்து துறை சரி செய்ய வேண்டும்  என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தி: ஶ்ரீதரன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!