பேருந்து ஓடும்போதே ஓட்டுநர் உயிரிழப்பு! பலரின் உயிரைக் காப்பாற்றிய நடத்துநர்..

பழனி அருகே பேருந்து ஓட்டுனர் நெஞ்சுவலியால் மரணம்- பேருந்தை ஓட்டிச் சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டது- நடத்துனர் விரைந்து செயல்பட்டதால் பேருந்து விபத்தில் சிக்காமல் தப்பியது!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து புதுக்கோட்டை கிராமத்திற்கு சென்றுள்ளது. பேருந்தை ஓட்டுனர் பிரபு இயக்கி சென்றுள்ளார். பேருந்து கணக்கம்பட்டியில் இருந்து புதுக்கோட்டை சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் பிரபுவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் பேருந்து ஓடும் போதே மயங்கி விழுந்து பிரபு உயிரிழந்தார். அருகில் இருந்து நடத்துனர் பிரபு மயங்கியதை பார்த்து விரைவாக செயல்பட்டு பேருந்தில் பிரேக் இயக்கி சாலை ஓரத்தில் இருந்து நிறுத்தியுள்ளார். இதனால் பேருந்து விபத்தில் சிக்காமல் தப்பியது. பேருந்தில் பயணிகள் இருந்த நிலையில் நெஞ்சுவலியால் ஓட்டுனர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சென்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!