மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குப்பல்நத்தம் பஞ்சாயத்தைச் சேர்ந்தது பரமன்பட்டி கிராமம். இக் கிராமத்தில் 350 மேற்பட்ட குடும்பங்களும் அருகிலுள்ள ஆண்டிபட்டி

கிராமத்தில் 450க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றன. இக் கிராமங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் அருகில் உள்ள சின்ன கட்டளை கிராமத்தில் இறங்கி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டும். மேலும் கிராமத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் மேல்நிலை பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் சின்ன கட்டளை அல்லது சேடபட்டி கிராமத்திற்கு நடந்து சென்று பேருந்தில் ஏற வேண்டிய சூழ்நிலை உள்ளது. பேருந்து வசதி இல்லாததால் வயதான பெண்கள் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் அவசர காலங்களில் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாகும். கிராமத்தில் விளையும் காய்கறிகள், சோளம்,கம்பு போன்றவற்றை உசிலம்பட்டி மற்றும் பேரையூர் சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் .அவ்வாறு செல்வதென்றால் ஆட்டோ ,மினி லாரியில் தான் கொண்டு செல்ல வேண்டும். காய்கறிகள் விலை குறையும் போது வண்டிகளின் வாடையை கட்டணம் அதிகமாக இருப்பதால் தலைசுமையாக மூன்று கிலோமீட்டர் தூரம் காய்கறி மூட்டைகளை விவசாயிகள் தூக்கிச் செல்ல வேண்டியது உள்ளது.
மேலும் அவசர காலங்களில் முதியவர்கள் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் விவசாயமே செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். எனவே உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் செல்லும் அரசு பேருந்தை சின்ன கட்டளையில் இருந்து பரமன் பட்டி, ஆண்டிபட்டி, சேடபட்டி வழியாக செல்லுமாறும், மீண்டும் பேரையூரில் இருந்து வரும் பொழுது சேடபட்டி ஆண்டிபட்டி பரமன்பட்டி ,சின்ன கட்டளை வழியாக உசிலம்பட்டி செல்லுமாறு இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு பேருந்து இயங்கும் பட்சத்தில் தங்கள் கிராமத்தில் விவசாயம் அழியாமல் காப்பாற்றப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர். இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை அமைச்சர், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோரிடம் 25க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.