தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேவுள்ள கோவில் பட்டி ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு சுடுகாடு மற்றும் அடிப்படை வசதி அமைத்து தர கோரிக்கை.
கோவில் பட்டி கிராமத்தில் ஐம்பத்திற்கு மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகிறனார்.தற்போது அப்பகுதியில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு சுடுகாடு மற்றும் எந்தவொரு வசதியும் இல்லை. அவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட ஒரு ஏக்கர் நிலத்தில் உடல்களை புதைத்து வருகின்றனார். ஆனால் அந்த நிலத்தில் முள் புதர் வளர்ந்துள்ளது.பிணங்களை எரிக்க ஒரு கிலோ மீட்டர் வரை நடந்து சென்று எரிக்க வேண்டிய நிலை உள்ளது. தாழ்த்தப்பட்ட இருசமூகத்தினர் வசித்து வருகின்றனார் .மாற்று சமூகத்தினருக்கு அனைத்து வசதி கொடுத்துள்ளனார்.ஆனால் அருந்தியர் வசிக்கும் பதிகளுக்கு பாராபட்சம் காட்டுவதாக கோவில்பட்டி ஊராட்சி மன்றத்தின் மீது புகார் தெரிவித்து வருகின்றனார். அருந்தியர் பகுதிகளுக்கு எந்தவொரு திட்டத்தை செய்து தருவதில்லை. அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் சுடுகாடு, எரியூட்டு கொட்டகை அமைத்து தர வேண்டும் என ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் வைகை காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனி செய்தியாளர் பால் பாண்டி


You must be logged in to post a comment.