ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த ஒப்பந்ததாரர் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடி கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலணியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் நாடகமேடை அமைக்கும் பணியை தனது நண்பர் பெயரில் வேலை எடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முழூவேலையும் முடித்துள்ளார். மேற்படி வேலைக்கான தொகையில் பகுதி தொகையாக ரூ. 3.36 லட்சம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது, மீதிதொகையான ரூ.4.2 லட்சம் நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே புகார்தாரர் இன்று 04.12.2024 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி என்பவரை சந்தித்து நாடகமேடை அமைக்க ஒதுக்கிய நிதியில் விடுவிக்கப்படாமல் இருக்கும் மீதிதொகையை பற்றி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி அவர்களிடம் கேட்ட போது, அவர் தனக்குரூ.3000/-ம்,அலுவலக செலவிற்கு ரூ. 2000/- ஆக மொத்தம் ரூ.5000/-ம் பணத்தை லஞ்சமாக இன்று மதியத்திற்குள் கொடுத்தால்தான் மீதித்தொகையை விடுவிப்பேன் என மனுதாரரிடம் காரராக கூறிவிட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிஸ்ஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார் அவர்களின் அறிவுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.5000/- லஞ்சமாக வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி கையும் களவுமாக பிடிபட்டனர். மேற்படி நபர் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You must be logged in to post a comment.