இராமநாதபுரம் நகராட்சியில் காட்டுப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் தனக்கு சொந்தமான 1312 .5 சதுரடி காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி இராமநாதபுரம் நகராட்சி வருவாய் பிரிவில் கோரிக்கை வைத்துள்ளார். அப்போது வருவாய் பிரிவில் காலி மனை வரிக்கு 8000மும் லஞ்சம் 4000 சேர்த்து 12000 கொடுத்தால் மட்டுமே வரி நிர்ணயம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த குமார் நேரடியாக இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். இப்புகாரை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை குமாரிடம் கொடுத்து அனுப்பினர். நேரடியாக இராமநாதபுரம் நகராட்சிகற்கு வந்த குமார் ரசாயனம் தடவிய ரூபாய் 4000ஐ வருவாய் பிரிவு உதவியாளர் கணேசனிடம் வழங்கினார். லஞ்ச பணம் 4000 ஐ கணேசன் வாங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் பில் கலெக்டர் கணேசனை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவரிடமிருந்து லஞ்சம் வாங்கிய பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் இரவு 7.30 மணி வரை சோதனை மேற்கொண்டனர். சொத்து வரி அதிகரிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ள நிலையில் இராமநாதபுரம் நகராட்சி பில் கலெக்டர் கைதானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




லஞ்சம் வாங்கினவன் கைது செய்யபட வேண்டும். ராமநாதபுரம் நகராட்சியில் 95% பேர் கைது செய்யப்பட வேண்டியவர்களே!
கட்டிட அனுமதி,வீட்டுவரி ரசீது என அனைத்திலும் லஞ்சமே பல் இழிக்கிறது.