இராமநாதபுரம், அக்.20 – இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் உள்ள பத்திப்பதிவு அலுவலகத்தில் நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு நெ 1 சார் பதிவாளர் அறையில் இருந்த கணக்கில் வராத ரூ.1.80 லட்சத்தை கைப்பற்றினர். இது தொடர்பாக சார் பதிவாளர் முத்து பெத்தாச்சியிடம் விசாரித்து வருகின்றனர். இரவில் நடத்திய சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


You must be logged in to post a comment.