ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்: ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு..!
ராமநாதபுரம் நகர அஇஅதிமுக சார்பில், ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு தனியார் மஹால்களில், அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் மதியம் முதல் மாலை வரை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜ வர்மன், கழக அமைப்பு செயலாளர் சுதா கே.பரமசிவம் ஆகியோர் முன்னிலையில், பாகம் கிளை கழக நிர்வாகிகள் அமைத்தல் தொடர்பாக மற்றும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி உறுப்பினர் சேர்க்கை, கழக வளர்ச்சிப் பணி தொடர்பான ஆய்வு குறித்து பேசப்பட்டது. மேலும் ராமநாதபுரம் நகரத்திற்கு உட்பட்ட பூத்துகளில் பூத் கமிட்டி ஆய்வு பணி நடைபெற்றது.
கழக மாணவரணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், ராமநாதபுரம் நகர பூத் கமிட்டி பொருப்பாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.