சோனகன் என்ற மஹ்மூது நெய்னா..

சோனகன் என்ற மஹ்மூது நெய்னா வளர்ந்து வரும் எழுத்தாளர் என்பதை விட வளர்ந்த எழுத்தாளர் என்றால் மிகையாகாது. 1993ம் வருடம் மதுரை வக்ஃப் வாரிய கல்லூரியில் இளநிலை பட்டத்தை முடித்து, பின்னர் முதுநிலை பட்டத்தை சென்னை புதுக்கல்லூரியில் முடித்தவர்.

அவர் சிறந்த எழுத்தாற்றல் மிக்கவர் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, காரணம் 1970க்கு முந்தைய காலத்தில் வியாபாரத்திலும், ஒப்பந்தங்கள் எழுதுவதில் யாரும் மிஞ்சமுடியாது என்ற இடத்தை வகித்த ஐந்து சகோதரர்கள் அடங்கிய எஸ்.வி.எம் குடும்பத்தைச் சார்ந்தவர் மஹ்மூது நெய்னா. எஸ்.வி.எம் சகோதரர்களில் ஐந்தாவது சகோதரர் ஆகிய எஸ்.வி.எம். காசிம் அக்காலத்தில் தன் எழுத்தாற்றலுக்காக எலிசபெத் ராணியிடம் வாழ்த்து மடல் பெற்றவர். இக்குடும்ப பின்னனியில் வந்த மஹ்மூது நெய்னாவின் புத்தகம் நிச்சயமாக ஒரு எழுத்தோவியமாக இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை.

மஹ்மூது நெய்னாவில் கைவண்ணத்தில் வரவிருக்கும் “கீழக்கரை நினைவலைகள்” நிச்சயமாக கீழக்கரையின் வரலாறு, கீழக்கரையின் வளர்ச்சி, கீழக்கரையின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு தூணாக இருந்தவர்களின் வரலாரையும் மக்களுக்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அவருடைய எழுத்துப்பணி இன்னும் வீரியமாக நடைபோட கீழை நீயூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!