தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நெல்லையில் எழுத்தாளர் இரா.இரமணன் எழுதிய “கதை கேளு…கதை கேளு”என்ற நூல் வெளியீட்டு விழா நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறையில் 13.05.19 திங்கள் அன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு எழுத்தாளர் நாறும்பூநாதன் தலைமை தாங்கினார்.கவிஞர் கிருஷி வரவேற்புரை வழங்கினார். எல்.ஐ.சி.மேனாள் அலுவலர் வி.ஜே.சிங் நூலை வெளியிட எழுத்தாளர் ச. தமிழ்ச் செல்வன் முதல்படி பெற்றுக்கொண்டார்.
தமிழக அரசின் தமிழ் செம்மல் விருதாளர் கவிஞர் பேரா. உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் தமிழ்ச் செல்வன் நிறைவுரை ஆற்றி அவர் பேசுகையில்”கதையோ கவிதையோ எந்த ஒரு படைப்பும் முழுமையாக நல்லா இருக்கணும்னு அவசியம் இல்லை.அந்த படைப்பில் சில வார்த்தைகள்… அல்லது ஒரு வார்த்தை நம்மைக் கிளர்த்துவதாக இருந்தால் போதும்.அந்த படைப்பு வெற்றிகரமான படைப்புதான். எழுத்தாளன் வார்த்தைகளைத்தான் இந்த உலகத்திற்கு தருகிறான்” என குறிப்பிட்டார்.
நிறைவாக நூலாசிரியர் இரா.இரமணன் ஏற்புரை வழங்கினார். சங்கத்தின் கிளைச்செயலர் வி.சண்முகம் நன்றி கூறினார்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.