இராமநாதபுரம், ஜன.7 – இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதான வளாகத்தில் முகவை சங்கமம் 6.0 சார்பில் வாசிப்பை சுவாசிப்போம் எனும் 6 வது புத்தகத் திருவிழா பிப்.2 முதல் பிப்.12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வாசகர்கள் பார்வைக்கும், விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு புத்தகம் வாசிப்பு தொடர்பாக ஓவியக் கண்காட்சி, மூலிகைப் பொருட்கள் தயாரிப்பு கண்காட்சி இடம் பெற உள்ளது. இதை முன்னிட்டு தினமும் இரவு கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வீடியோ பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You must be logged in to post a comment.