கோவில்பட்டியில் 32 தேசிய புத்தக கண்காட்சி தொடக்கம்…

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில் 32வது தேசிய புத்தக கண்காட்சி தொடக்க விழா நடந்தது.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் அ.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். புனித ஓம் கான்வென்ட் பள்ளி தாளாளர் வி.எம். லட்சுமணப் பெருமாள் முன்னிலை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ்.வேலுச்சாமி கண்காட்சியை திறந்து வைத்தார்.

இந்திய கலாசார நட்புறவுக் கழக மாநில செயலாளர் க. தமிழரசன், இலக்கிய உலா ரவீந்திரன், வழக்கறிஞர் டி.முத்துக்குமார், மகிழ்வோர் மன்றம் இயக்குனர் ஜான் கணேஷ், திருநெல்வேலி கிளை மேலாளர் கு.பாலசுப்பிரமணியன், கண்காட்சி பொறுப்பாளர் எஸ்.ராஜகோபால் தமிழாசிரியர் பி.ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புத்தகக் கண்காட்சி டிச.16-ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். புத்தகங்களை சலுகை விலையில் பெற்று செல்லலாம் என மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!