காட்பாடி தாலுகா மாதாண்டகுப்பத்தில் உள்ள அரிசி ஆலையில் 15 கொத்தடிமைகள் மீட்பு. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த மாதாண்டகுப்பத்தில் பசுபதிக்கு சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இந்த நெல் அரிசி ஆலையில் கடந்த 4 ஆண்டுகளாக கொத்தடிமைகள் வேலை செய்வதாக உதவி ஆட்சியர் மெக ராஜுக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக வருவாய் துறை மற்றும் காவல்துறையினருடன் விரைந்த உதவி ஆட்சியர்
ஆலையில் இருந்த 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 கொத்தடிமை தொழிலாளிகளை அதிரடியாக மீட்டனர். பொன்னை காவல்துறை பசுபதியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









