இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்! புகார் எண்கள் அறிவிப்பு..

இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்! புகார் எண்கள் அறிவிப்பு..

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழி வாத்து மற்றும் காடை இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும். நோயுற்றது பேயல் அறிகுறிகள் உள்ள பறவைகளை இறைச்சிக்காக பயன்படுத்தக் கூடாது.

உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் சுத்தமாகவும். சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்து பின்பு பயன்படுத்த வேண்டும். இறைச்சி கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மருத்துவர் சான்று பெற்றிருக்க வேண்டும் மேலும் உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டங்களைப் பின்பற்றி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உணவு பொருட்களை தயார் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் உணவுப் பொருட்கள் சம்மந்தமாக உள்ள புகார்களை 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும். unavupukarzęgmail.com என்ற மின்னஞ்சல் மூகமாகவும் கூகுள் பிளேஸ்டோரிலிருந்து Food Safety Consumer App-யை பதிவிறக்கம் செய்தும் புகார் தெரிவிக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா  தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!