அடையாளம் தெரியாத ஆண் பிரேதத்தை அகற்ற ஆள் வராததால் தனி ஒரு காவலரே தூக்கிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரல்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் உள்ள கண்மாயில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மிதப்பதாக அப்பகுதியில் சென்ற விவசாயிகள் போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் ,சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கண்மாயில் மிதக்கும் ஆணின் சடலம் கண்டு, அவரது உடல் சிதைந்த நிலையில் இருப்பதால் , பல நாட்களுக்கு முன்பே கண்மாயில் உயிரிழந்திருக்கலாம் எனவும், இறந்தவர் கைலி மற்றும் நீல நிற சட்டை அணிந்துஉள்ளார் . 45 வயதுமிக்க அந்த ஆணின் சடலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கு,அவரது உடலை எடுப்பதற்கு அங்கு கூடியிருந்த இளைஞர்கள் எவரும் முன் வராததால், ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உதவியுடன், ஆஸ்டின்பட்டி காவல்நிலைய முதல் நிலை காவலர் முத்துக்குமார் , உடலை ஸ்டெட்சரில் வைத்து தூக்கி சென்று ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள், முதல் நிலை காவலர் முத்துக்குமாரின் சேவை பணியை பாராட்டி வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் நேற்று மற்றும் அதற்கு முன்பும் தொடர்ந்து கொலைகள் நடந்து வருவதால், அப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!