ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான (பி.எல்.ஏ-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம். (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான பயிற்சி. மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொண்டார்.
செம்பட்டி தனியார் திருமண மஹாலில், வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான (பி.எல்.ஏ-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், (எஸ்.ஐ.ஆர்) தொடர்பான பயிற்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வாக்குசாவடி நிலை முகவர்களுக்கான (பி.எல்.ஏ-2) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், (எஸ்.ஐ.ஆர்) தொடர்பாக நடைபெற்ற, பயிற்சி முகாமில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான, சரவணன் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி முகவர்களுக்கு பணிகள் குறித்து தெளிவுரைகள் வழங்கினார்.
மேலும், வாக்குச்சாவடி முகவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களும் அளித்தார்.
மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் பேசுகையில், ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று முறை நேரில் சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட உள்ளனர். எந்த ஒரு வாக்காளர்களும் விடுபடக்கூடாது. ஒரே நபருக்கு இரண்டு இடத்தில் வாக்கு இருந்தால், அதில் ஒரு வாக்கு நீக்கப்படும். வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் நவம்பர் 4-ம் தேதி முதல், டிசம்பர் 4-ம் தேதி வரை வழங்கப்படும். பின்னர், டிசம்பர் 9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, மாவட்டம் ஆட்சித் தலைவர் சரவணன் பேசினார்.
செம்பட்டியில் நடைபெற்ற, இப்பயிற்சியில், வகுப்பு வாக்காளர் பதிவு அலுவலரும், ஆத்தூர் வட்டாட்சியருமான முத்துமுருகன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளை சேர்ந்த
வாக்குசாவடி நிலை (பி.எல்.ஏ-2) முகவர்கள் கலந்து கொண்டனர்.

