திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக ரத்த தான முகாம்..

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் NSS, RRC மற்றும் YRC சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது.  RRC ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என். ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர் எம். சுப்பிரமணி  தலைமையில் துணை முதல்வர் முனைவர் எம். பழனியப்பன் முன்னிலையில் மாவட்ட ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் ரத்த தான முகாமினை துவக்கி வைத்தார்.

ரெட் கிராஸ் ரத்ததான பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எஸ். அய்யப்பன் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ஆகியோர் ரத்த தானத்தின் அவசியம் பற்றி பேசி, ரத்த தானம் செய்யும் மாணவர்களை வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

மாவட்ட ரத்த வங்கி அலுவலர் டாக்டர் திருமதி கே. பாத்திமா பத்துல் ராணி மற்றும் அவர்களது குழுவினரும் NSS, YRC மற்றும் RRC மாணவ மாணவிகள் 65 பேரிடம் ரத்தம் தனமாகப் பெற்றனர்.

கல்லூரியின் NSS திட்ட அலுவலர் பேராசிரியர் E.சுரேஷ் மற்றும் YRC ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ். செல்வம் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!