இன்று (22-12-2024) Green Globe மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் (KCC) இணைந்து நடத்திய இரத்ததான முகாம், துபாயின் ஜதாஃப் பகுதியில் உள்ள Dubai Health Blood Donation Centreல் நடைபெற்றது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தனர்.
Green Globe சார்பில், இரத்த தானத்தில் பங்கேற்ற அனைவருக்கும் துபாய் ஹெல்த் மையத்தின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் ஏற்பாடுகளை Green Globe அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் (KCC) இணைந்து செய்திருந்தனர். இரத்த தானம் செய்தவர்களுக்கு சம்யுக்தா பவன் சார்பில் உணவு வழங்கப்பட்டது.
இது போல் மேலும் பல சமூக சேவைகளை முன்னெடுக்க ஒரு தொடக்கமாக அமையும் என அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.