தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி கிராமத்தில் 3011-வது இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியாவின் முதல் இரத்ததான கிராமமாக வெங்கடாம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு நடைபெற்ற இரத்ததான முகாமிற்கு ரஜினி ரத்ததான கழகத் தலைவர் வி. எஸ் மணியன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் படையப்பா சங்கர், முள் எலி ஆராய்ச்சியாளர் பவானி அபினேஷ், தாயின் மடியில் கோமதிநாயகம், பாவூர்சத்திரம் பாண்டியராஜா, சுரேஷ்குமார், ஞானசெல்வன், ஆலங்குளம் லைப் லைன் பட்டு ராஜா, நிலவன் வேல்சாமி, மயிலை ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் யாவரையும் வரவேற்றார். ரத்ததான முகாமை செங்கோட்டை காந்தியவாதி ராம் மோகன் துவக்கி வைத்து பேசினார்.
முக்கூடல் பல் மருத்துவர் ஏகலைவன், அரிமா சசி ஞானசேகரன், ஆலங்குளம் விஜயன், விஜயகுமார், மெரிட் கல்லூரி மாணவர் டிரஸ்ட் கணேசன், சாம் ஜெபதுரை, சிவராம கிருஷ்ணன், டாணா பரமசிவன், டிரைவர் சாம் எபனேசர், கடையநல்லூர் காங்கிரஸ் காதர், சிவில் இன்ஜினியர் தங்க கார்த்திக் மற்றும் பலர் ரத்ததானம் செய்தனர். முகாமில் ரத்த தானம் செய்ய ஆர்வமாக டிரஸ்ட் குழந்தைகள் இல்லத்திற்கு வருகை புரிந்தவர்களுககு சமூக நல ஆர்வலர் பூ. திருமாறன் நன்றி தெரிவித்தார். முகாம் ஏற்பாடுகளை கடைய கடையநல்லூர் அயூப்கான், பியூலா, சுரேஷ், சக்தி சுவாதி, பிரவீன், சிவா, சுடலை பேச்சி, இசக்கியம்மாள், பெண் உலகம் சாந்தி, டிரஸ்ட் நன்னன், திப்பணம்பட்டி தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் குருதி சேகரிப்பிற்கு தென்காசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் என். அரவிந்த் ராம், வேளாங்கண்ணி, முகமது ரபீக் உதவினர். ரஜினிகாந்த் தொண்டர்கள், அ.தி.மு.க.வினர், காங்கிரஸார், அரிமா சங்கத்தினர் ஆர்வமாக முகாமிற்கு வந்திருந்தனர். இரத்ததான முகாமை பார்வையிடவும், விளக்கம் பெறவும் அடுத்த தலைமுறையான மாணவ மாணவியர், சிறுவர் சிறுமியர், குழந்தைகள் அழைக்கப்பட்டு இருந்தனர். 1987 ஆம் ஆண்டு துவங்கி தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் ரத்ததான முகாம் சேவையை வெங்காடம்பட்டி சமூக ஆர்வலர் பூ. திருமாறன் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.