தேசிய பேரிடர் மீட்பு தினத்தையொட்டி செய்யது ஹமீதா கலைக்கல்லூரியில் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இரத்த தானமுகாம்..

கீழ்க்கரை செய்யது ஹமீதா கலைக்கல்லூரியில் 31/1/2024 அன்று காலை 10:00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமை NCC,YRC, SHASC- Rotaract ஆகியோருடன் கீழக்கரை ரோட்டரி கிளப்பும் இணைந்து நடத்தியது. இதில் சதக் டிரஸ்ட் இயக்குனர் S.M.A.J.ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லாஹ் தலைமையேற்றார். S.பழனிக்குமார் தாசில்தார் மற்றும் Dr.ராசிக்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர். Dr.கபீர், செயலாளர்.Er. எபன்,செஞ்சிலுவைச் சங்கம் சார்பாக மாவட்ட சேர்மன், Dr.S.சுந்தரம், செயலாளர்.m.ரமேஷ்., ரோட்டராக்ட் தலைவர். முகம்மது சஃபி உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

86 மாணாக்கர்கள், இரத்த தானம் வழங்கினர். வரவேற்புரையை கல்லூரி முதல்வர் Dr.ராஜசேகர் மற்றும் நன்றியுரையை Dr.k.தவசிலிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!