இராமநாதபுரம், ஆக.20 – இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் சார்பில் 7 இடங்களில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனடிப்படையில் தவ்ஹீத் ஜமாத் பெரியபட்டினம் கிளை, இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சார்பில் பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரத்த தானம் இன்று நடந்தது. மாவட்ட தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமை வகித்தார்.
கீழக்கரை வட்டாட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) சேகு ஜலாலுதீன் துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரஃபாத், மாவட்ட துணைச்செயலாளர்கள் சீனி ரஜப்தீன், மீரான், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் நஸ்ருதீன், பெரியபட்டினம் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இம் முகாமில் அனைத்து தரப்பு தன்னார்வலர்கள் 20 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர். இரத்ததானம் செய்த வர்களுக்கு அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









