கீழக்கரையில் சில தெருக்களில் வசிப்பவர்களுக்கு ஒருவர் இறந்த பின் நம் உடலை தூக்கி செல்லும் பொழுதுதான் கட்டிட விதிமீறலின் பாதிப்பை அறிந்து கொள்ள முடியும், அந்த அளவுக்கு ஒரு வீட்டின் மற்றொரு விட்டின் படியோடு உரசும் வகையில், சில நொடி தவறினால் தலையை பதம் பார்த்து விடும், இதற்கு முக்கிய காரணம், நகராட்சியின் அலட்சிய போக்கும் கட்டிடம் கட்டுபவர்களின் சமுதாய அக்கறை இல்லாத காரணமும் தான். இதுதான் கீழக்கரையில் உள்ள அனைத்து தெருக்களின் நிலை.
உதாரணமாக சமீபத்தில் சின்னக் கடைத் தெரு பகுதியில் உள்ள ஓர் வீட்டில் ஏழு அடிக்கு மிகாமல் வெளியே இழுத்து சறுக்கு பாதை கட்டியுள்ளார்கள். கடந்த மாதம் இதுகுறித்து நகராட்சியில் புகார் மனு அளித்ததை தொடர்ந்து விதி மீறி கட்டினால் இடிப்பதுடன் அபாராதம் விதிக்கப்படும் என எச்சரித்து சென்றனர். ஆனால் அதையும் மீறி இரவு 2மணிக்கு மேல் விதி மீறி கட்டிட பணி நடைபெற்றுள்ளது. இது ஒரு உதாரணம்தான், இதுபோல் பல கட்டிடங்களை கீழக்கரையில் காணலாம். அதே போல் பல இடங்களில் கார் செட்டுக்காக நடைபாதை வரை சிமின்டால் மேடு அமைந்துள்ளதால், பல பேர் தடுக்கி விழுந்து, எலும்பு முறிவு ஏற்பட்டு பல லட்சங்கள் செலவழித்துள்ளார்கள்.
இது சம்பந்தமாக கீழக்கரை மக்கள் டீம் காதர் கூறுகையில், “விதிகளை மீறுவதற்கு இரவு நேரத்தை தேர்ந்தெடுத்த அந்த வீட்டாரை நினைத்து மனது வேதனை அளிக்கிறது. இதன் மேல் வாறுகால் பாதை உள்ளது. அடைப்பு
ஏற்பட்டால் தெருவுக்குள் சுகாதாரக் கேடு ஏற்படும் என்பதும், இதை உடனே நகராட்சி நிர்வாகம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும், மற்றவர்களும் இதே போல் விதி மீறல் செயல்களுக்கு முன்னுதாரணம் ஆகி விட கூடாது என்றால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க நகராட்சியினர் ஆயுத்தமாக வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்” என வேதனையுடன் கூறி முடித்தார்.
————————-///—————————————-


உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












ஏனையா இதற்கே பொங்கி எழுறீங்களே ஒவ்வொரு வீட்டு வாசப்படி வைக்க 4அடி ஆக்கிரமிக்கிறீங்களே போதாக்கொறைக்கு கீழக்கரை சாலை முழுவதும் ராவோடு ராவா ஸ்பீட் பிரேக் என்ற பெயரில் சாலையை நாசப்படுத்துவதோடு வாகன ஓட்டிகளை சிரமப்படுத்துரீகளே அவசரத்துக்கு அவசர ஊர்தி செல்லமுடியுமா இந்த ஊரிலே இதற்கெல்லாம் பொங்கமாட்டீகளா