உயிரை பணையம் வைத்து அரசு சேவைக்காக காத்திருக்கும் கீழக்கரை மக்கள்… ஆட்சியர் மற்றும் கீழக்கரை நிர்வாகம் கவனிக்குமா??.. சமூக ஆர்வலரின் கோரிக்கை..

கீழக்கரை நகராட்சி 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டது ஆகும். ஆனால் இங்கு அரசு சேவைகளான ஆதார் கார்டு  மற்றும் பிற சேவைகளுக்காக மக்கள் காத்திருக்கும் கட்டிடம் *ஹைதர் கால* கட்டிடம் என கூறும் அளவுக்கு மிகவும் பழமையாக எந்த சமயத்திலும் இடிந்து விழக்கூடிய சூழலில் உள்ளது, இந்த இடத்தில் தான் குழந்தைகள் பயிலும் பால்வாடியும் உள்ளது குறிப்பிடதக்கது. இந்த  கட்டிடத்தில் மழை பெய்தால் தண்ணீர் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.

பழமையான கட்டிடத்திலும் ஆதார் எடுக்க தினமும்  40 டோக்கன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு சிறிய குழந்தைகளை தாய்மார்கள் வைத்து மிகவும் சிரமப்படுகின்றனர், ஆனால் இதை விட வேதனை பல நேரங்களில் பொதுமக்கள் காக்க வைக்கப்பட்டு பின்னர்  ஆன்லைன் வேலை செய்யவில்லை என திருப்பி அனுப்புவதுதான்.

இது தொடர்பாக SDPI கட்சி முன்னாள் பொருளாளர், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி (மேற்கு ) கீழை அஷ்ரஃப் தெரிவிக்கையில், கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு தாய்மார்கள் மற்றும் வயதான முதியவர்களும் நின்றபடியே சிரமத்துக்கு ஆளாகின்றனர், இதை கவனத்தில் கொண்டு முறையாக இருக்கை உள்ள வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் இச்சேவை மையத்தில்  ஒரு நபர் மட்டுமே பணியில் உள்ளார், ஆகையால் ஆதார் அட்டை பணிகள் நிறைவடைய ஒரு நபருக்கு குறைந்தது 15 நிமிடத்திற்கும் மேல் ஆகிறது. இது போன்ற பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் கூடுதலாக அரசு பணயாளர்களை நியமித்து  மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்” என வேதனையுடன் கூறி முடித்தார்.

உயர் பலி ஆகும் முன்பா விழிக்குமா கீழக்கரை மற்றும் மாவட்ட நிர்வாகம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!