திமுக அரசின் நவீன எமர்ஜென்சி அடக்குமுறைக்கு மக்கள் அடிபணிய மாட்டார்கள்!-பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை..

திமுக அரசின் நவீன எமர்ஜென்சி அடக்குமுறைக்கு மக்கள் அடிபணிய மாட்டார்கள்!-பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை..

இது சம்பந்தமாக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பெண்ணுரிமைக்கு எதிரான, வல்லூறுகளின், திராவிட மாடல் திமுக ஆட்சியை, தமிழகப் பெண்களே அகற்றுவர்!

திமுக அரசு மூன்றாண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண் குழந்தைகள், கல்லூரி மாணவிகள், நடுத்தர பெண்கள் முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருமே திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால், காவல்துறையின் மெத்தனத்தால் நாள்தோறும் பாதிக்கப்படுவது தொடர் கதை ஆகி வருகிறது.

பொறுத்து பொறுத்து பார்த்த தமிழக மக்கள், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமையை கண்டித்து தன் எழுச்சியாக தன்முனைப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதியை நிலைநாட்ட வேண்டிய திமுக அரசும் , சட்டத்தை அமல்படுத்த வேண்டிய தமிழக காவல்துறையும் , கடமையை செய்யாமல் சோரம் போக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கியது “கயவனா? கயவர்களா? ” யார் அவர் ? ” ஏன் இந்த மாபாதகம் ?” என்கிற கேள்வியை தமிழக மக்களின் மனதில் எரிமலையாய் வெடித்ததை தொடர்ந்து அனைத்து கட்சிகளுமேதற்பொழுது திமுக அரசை எதிர்த்து போராட்டம் செய்து வருகின்றன.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் திமுக அரசின் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு கட்டுவது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து, தமிழகத்தின் சமூக நல இயக்கங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அனைத்து அரசியல் கட்சிகள், பெண்ணுரிமை சங்கங்கள் அனைத்துமே களத்தில் இறங்கி போராட்டம் நடத்துவதை அராஜகத்தோடு திமுக அரசின் காவல்துறை நசுக்க முற்படுவது சட்டவிரோதமானது.

இன்று தமிழக பாஜக மகளிர் அணி சார்பாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் தொடங்க முற்படும்போது தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு மற்றும் தமிழக பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி தலைமையில் பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள மதுரையை நோக்கி கிளம்பிய பாஜக மகளிர் அணியினர் முன்னிரவில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் விரோத திமுக அரசு எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் தமிழக பாஜகவின் மீதும் மற்ற கட்சிகள் மீதும் காவல்துறையின் தொடர் அடக்கு முறையை பயன்படுத்தி மிரட்டுவது, தடுக்க நினைப்பது, வழக்கு பதிவு, கைது செய்வது என்று நவீன எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்து போல் செயல்படுவதை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அமைதியான மக்கள் புரட்சி மூலம் திமுக என்ற கட்சி அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படும்.

ஏ.என்.எஸ்.பிரசாத், தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர்,

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!